விமானம் தாங்கி போர் கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த்: இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

PM Modi in Kochi: பிரதமர் நரேந்திர மோடியின் கர்நாடக பயணத்தின் இரண்டாவது நாளான இன்று, கொச்சியில், பிரதமர் மோடி உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலை திறந்து வைத்து, அந்த கப்பலை கடற்படையில் சேர்க்கிறார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 2, 2022, 07:24 AM IST
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்தை இன்று நாட்டிற்கு அர்ப்பணிகிறார் பிரதமர் மோடி.
  • நாட்டிற்கு சொந்தமாக விமானம் தாங்கி போர்க்கப்பல் கிடைக்கும்.
  • ஐஎன்எஸ் விக்ராந்த் ரூ.23,000 கோடி செலவில் உருவாகியுள்ளது.
விமானம் தாங்கி போர் கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த்: இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி title=

கொச்சியில் பிரதமர் மோடி: பிரதமர் நரேந்திர மோடியின் கர்நாடக பயணத்தின் இரண்டாவது நாளான இன்று, கொச்சியில், பிரதமர் மோடி உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலை திறந்து வைத்து, அந்த கப்பலை கடற்படையில் சேர்க்கிறார். இது தவிர கடற்படைக் கொடியும் (குறி) திறந்து வைக்கப்படும். இந்த சிறப்பு விழாவில், மங்களூருவில் சாமானிய மக்களுக்கான பல்வேறு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கலந்து கொள்கிறார்.

நாட்டிற்கு சொந்தமாக விமானம் தாங்கி போர்க்கப்பல் கிடைக்கும்

கொச்சியில் உள்ள கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்டில் இன்று காலை 9:30 மணிக்கு முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணிக்கிறார். மதியம் 1:30 மணிக்கு மங்களூருவில் சுமார் 3800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். நிகழ்ச்சியின் போது, ​​காலனித்துவ காலத்திலிருந்து வேறுபட்ட, பணக்கார மற்றும் செழுமையான இந்திய கடல் பாரம்பரியத்தின் அடையாளமாக இருக்கும் புதிய கடற்படைக் கொடியையும் பிரதமர் வெளியிடுவார்.

ஐஎன்எஸ் விக்ராந்த் என்றால் என்ன

முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், பாதுகாப்புத் துறையில் தன்னிறைவை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாகக் கருதப்படுகிறது. இந்தக் கப்பல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற பெயரில் விமானம் தாங்கி கப்பலாக உருவாக்கப்பட்டது. இது இந்திய கடற்படையின் சொந்த நிறுவனமான போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்டது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனமான கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் மூலம் கட்டப்பட்டது. விக்ராந்த், அதிநவீன தானியங்கி அம்சங்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கடல்சார் வரலாற்றில் இதுவரை கட்டப்பட்ட மிகப்பெரிய கப்பலாகும் இது.

மேலும் படிக்க | நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் : என்னென்ன சிறப்பம்சங்கள் ? 

உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலுக்கு அதன் முன்னோடி மற்றும் இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலின் பெயரிடப்பட்டது. இது 1971 போரில் முக்கிய பங்கு வகித்தது. கப்பலில் அனைத்து உள்நாட்டு உபகரணங்கள் மற்றும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் நாட்டின் முன்னணி தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. விக்ராந்த் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், இந்தியா இரண்டு செயலில் உள்ள விமானம் தாங்கி போர்க்கப்பல்களைக் கொண்டிருக்கும். இது நாட்டின் கடல் பாதுகாப்புக்கு அதிகப்படியான பலத்தை அளிக்கும்.

இந்த முக்கியமான திட்டங்களை தொடக்கி வைப்பார்: 

மங்களூருவில் சுமார் 3800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுவார் என்று கூறப்படுகிறது.

பிரதமர் மோடி மங்களூரு துறைமுக ஆணையத்தால் இயக்கப்படும் கொள்கலன்கள் மற்றும் பிற சரக்குகளைக் கையாளும் நோக்கத்திற்காக, கப்பல்துறை எண். 14 இயந்திரமயமாக்கலுக்கு 280 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் ஒரு திட்டத்தை துவக்கி வைப்பார்.சுமார் 1000 கோடி ரூபாய் செலவில் துறைமுகம் மூலம் செயல்படுத்தப்படும் ஐந்து திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.
மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் மூலம் நடத்தப்படும் BS-VI மேம்படுத்தல் திட்டம் மற்றும் கடல்நீரை உப்புநீக்கும் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். 

BS-VI மேம்படுத்தல் திட்டம் சுமார் ரூ. 1830 கோடி மதிப்புடையது, இது BS-VI தரத்துடன் சுற்றுச்சூழலுக்கு மிகவும் தூய்மையான எரிபொருளை உருவாக்கும். இதேபோல், சுமார் 680 கோடி ரூபாய் செலவில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டமானது, நன்னீர் சார்ந்திருப்பதைக் குறைத்து, ஆண்டு முழுவதும் ஹைட்ரோகார்பன் மற்றும் பெட்ரோ கெமிக்கல்களின் சீரான விநியோகத்தை உறுதி செய்யும்.

மேலும் படிக்க | டெல்லி சட்டசபையில் இருந்து 3 பாஜக எம்எல்ஏக்கள் 'குண்டுகட்டாக' வெளியேற்றம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News