சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தினமும் மாற்றம் செய்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.100ஐ நெருங்கியது.
இதற்கிடையில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைத்ததையடுத்து அவற்றின் விலை சற்று குறைந்தது. அதன்படி இந்தியாவில் கடந்த 137 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.
மேலும் படிக்க | பெட்ரோலிய நிறுவனங்கள் கேஸ் சிலிண்டரின் விலை உயர்ந்தது
தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை விதிக்கப்பட்டன. அதன்படி கச்சா எண்ணெய் மீது ரஷ்யா தடை விதித்து. இதனால் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்தது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை உயரும் என்றும் பேசப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் போக்குவரத்து கழகம், தொழிற்சாலைகளுக்கு நேரடியாக வழங்கப்படும் டீசல் விலையை ரூ.25 உயர்த்தியது. அதன்படி ஒரு லிட்டர் டீசல் ரூ.116.88க்கு விற்கப்படுகிறது. அத்துடன் கடந்த ஆண்டு நவவம்பர் 5 ஆம் தேதி முதல் 137 நாட்களாக தொடர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.81க்கு விற்கப்பட்டு வந்தததை அடுத்து சென்னையில் பெட்ரோல் விலை 76 காசுகள் அதிகரித்து 102 ரூபாய் 16 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் ரூ.76 காசு உயர்த்தப்பட்டு 92.65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நகரங்கள் | பெட்ரோல் | டீசல் |
டெல்லி | 96.21 | 87.47 |
மும்பை | 110.82 | 95.00 |
கொல்கத்தா | 105.51 | 90.62 |
சென்னை | 102.16 | 92.19 |
மும்பையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே லிட்டருக்கு ரூபாய் 110.82 மற்றும் ரூபாய் 95.00 ஆக உயர்ந்துள்ளது. கொல்கத்தா பொறுத்தவரை, ரூபாய் 105.51 மற்றும் ரூபாய் 90.62 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக இன்று காலை வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் 50 ரூபாய் அதிகரித்து இன்று 967.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வேதனையில் உள்ளாகியுள்ளனர்.
மேலும் படிக்க | வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்தது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR