20 லட்சம் ரூபாய் Jaguar கார்-க்கு உலை வைத்த ₹15 குட்கா பாக்கெட்!

கிரேட்டர் நொய்டாவில் இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் ₹20 லட்சம் மதிப்புள்ளள ஜாக்குவார் கார் சில்லு சில்லாக நொறுங்கியுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 29, 2018, 04:29 PM IST
20 லட்சம் ரூபாய் Jaguar கார்-க்கு உலை வைத்த ₹15 குட்கா பாக்கெட்! title=

நொய்டா: கிரேட்டர் நொய்டாவில் இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் ₹20 லட்சம் மதிப்புள்ளள ஜாக்குவார் கார் சில்லு சில்லாக நொறுங்கியுள்ளது!

இந்த சாலை விபத்தானது காலை 7 மணியளவில் எக்ஸ்பிரஸ்வேயில் 'ஜீரோ பாயில்' பகுதியில் நடந்தேறியுள்ளது. இந்த காரை ஓட்டி வந்த நபர் காரினை வேகமாக ஓட்டி வந்ததால் விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இச்சம்பவத்தை நேரில் பார்த காவலர் ஒருவர் தெரிவிக்கையில், சீறிப்பாய்ந்து வந்த காரில் இருந்து ஓட்டுநர் தலையினை நீட்டி தன் வாயில் இருந்த குட்காவினை வெளியே துப்ப முயன்றார். அப்போது தன் கட்டுப்பாட்டினை இழந்த அவர் காரினை பாலம் குறுக்கு சந்திப்பில் செலுத்தினார். இதனால் பல லட்சம் மிதிப்பிலான கார் சில்லு சில்லாக நொறுங்கியது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் கௌதம புத்தர் நகர் பகுதியில் கசானா ஆல்பா செக்டர் 1 பிரிவில் வசித்து வரும் பிரஷாந்த் கசானா (27) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தை பாரத்த காவலாளி சம்பவயிடத்திற்கு விரைந்து மற்றொரு காவலாளி உதவியுடன் அவரை அருகில் இருக்கும் மகாவீர் மருத்துமனைக்கு சிகிச்சைக்ககாக அனுப்பிவைத்துள்ளனர். தற்போது உயிருக்கு ஆபத்தான கட்டத்தினை தாண்டிய காசான உடலில் பல காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

Trending News