அம்பேத்கர் சிலையை மீண்டும் சேதப்படுத்திய மர்ம நபர்கள்!

சென்னை திருவொற்றியூரில் உள்ள அம்பேத்கரின் சிலை மீது பெயிண்ட் வீசப்பட்டதை தொடர்ந்து, உத்தரபிரதேச மாநிலத்தில் மீண்டும் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.   

Last Updated : Mar 10, 2018, 01:36 PM IST
அம்பேத்கர் சிலையை மீண்டும் சேதப்படுத்திய மர்ம நபர்கள்! title=

சென்னை திருவொற்றியூரில் உள்ள அம்பேத்கரின் சிலை மீது பெயிண்ட் வீசப்பட்டதை தொடர்ந்து, உத்தரபிரதேச மாநிலத்தில் மீண்டும் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். 

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்திலும் ஒரு நாள் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று எச் ராஜா தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவியது.

எச் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் எச் ராஜா பெரியார் சிலை உடைப்பு குறித்து தான் கருத்து கூறவில்லை என்றும் அது தன் அனுமதியின்றி தனது அட்மின் பதிவு செய்தார் என்று தெரிவித்த ராஜா, அதற்காக வருத்தம் தெரிவித்தார்.

அதை தொடர்ந்து, திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை இந்துத்துவா அமைப்பினர் உடைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

பின்னர், உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. கேரளா மாநிலம் கண்ணூரில் நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் மகாத்மா காந்தி சிலை உடைக்கப்பட்டுள்ளது. 

பின்னர், தமிழர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட தலைவரான பெரியாரின் சிலை உடைக்கப்பட்ட சர்ச்சை அடங்கும் முன்னரே சென்னை திருவொற்றியூரில் உள்ள அம்பேத்கரின் சிலை மீது பெயிண்ட் வீசப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் மீண்டும் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். அஸம்காரில் உள்ள அம்பேத்கரின் முழு உருவ சிலையில் தலையை சேதப்படுத்தியுள்ளனர். 

சமூகநீதிக்காகவும், சாதிய ஏற்றத்தாழ்வுகளை களைய முயன்ற தலைவர்களின் சிலை சேதப்படுத்தப்படுவதும் உடைக்கப்படுவதும் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், அம்பேத்கர் சிலைசேதப்பட்டது  தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

 

Trending News