Karnataka: கோவில் உண்டியலில் சிறுநீர் கழித்தவர் ரத்தம் கக்கி இறந்ததால் பரபரப்பு

கோவில் உண்டியலில் மர்ம நபர்கள் சிறு நீர் கழித்தும், விந்து இருக்கும் ஆண் உறைகளை உள்ளே போட்டும் அட்டூழியம் செய்திருந்தனர். அது இந்த கோவிலில் மட்டும் நடந்த சம்பவம் அல்ல. அங்கிருக்கும் கிட்டத்தட்ட எல்லா கோவில்களிலும் நடந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 3, 2021, 04:47 PM IST
  • பக்தர்களின் கண்ணீர், கொரகஜா சுவாமியை மிகவும் வருந்த செய்திருக்க வேண்டும்.
  • குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜோகட்டேவில் வசிக்கும் அப்துல் ரஹீம் மற்றும் தவுபீக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
  • குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 153 (ஏ) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Karnataka: கோவில் உண்டியலில் சிறுநீர் கழித்தவர் ரத்தம் கக்கி இறந்ததால் பரபரப்பு title=

கர்நாடகத்தின் (Karnataka) கொரகஜா என வழிபடப்படும் சுவாமி கோவில் மங்களூரில் உள்ளது. கொரகஜா சுவாமி, சிவனின் வடிவமாக பார்க்கப்படுகிறார். அவர் எல்லை காவல் தெய்வம் போன்றவர். 

அங்கு இந்த கோவில் உண்டியலில் மர்ம நபர்கள் சிறு நீர் கழித்தும், விந்து இருக்கும் ஆண் உறைகளை உள்ளே போட்டும் அட்டூழியம் செய்திருந்தனர். அது இந்த கோவிலில் மட்டும் நடந்த சம்பவம் அல்ல. அங்கிருக்கும் கிட்டத்தட்ட எல்லா கோவில்களிலும் நடந்தது.

இந்த சம்பவம் நடந்ததது மூன்று மாதம் முன்பு. பக்தர்கள் அளித்த புகாரின் பேரில்  காவல் துறை விசாரனை மேற்கொண்டது.  ஆனால், காவல்துறை எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை என விட்டுவிட்டது. மனம் வருந்திய பக்தர்கள் கொரகஜாவிடமே வேண்டினார்கள். 

பக்தர்களின் கண்ணீர், கொரகஜா சுவாமியை மிகவும் வருந்த செய்திருக்க வேண்டும்.  

ALSO READ | அரசு கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிக்க தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆதரவு

கோவிலில் அராஜக செயலில் ஈடுபட்ட  நவாஸ்  என்பவருக்கு திடீரென உடல நலக்குறைவு ஏற்பட்டு,  தனது தலையை தானே சுவற்றில் மோதிக் கொண்டு ரத்தம் கக்கி இறந்தார். அவர் இறக்கும் போது கொரகஜா மிகவும் கோபமாக இருக்கிறார் எனவும் கூறிவிட்டு  இறந்ததால், அப்துல் ரஹீம் மற்றும் தவுபீக் ஆகியோருக்கும் பீதி ஏற்பட்டது.  இதில் தவுபீக்கிற்கும், நவாஸை போலவே உடல நலக் குறைவு ஏற்பட்டதால்,  அவர்கள் அலறிக் கொண்டு காவல் துறையிடம் வந்து சரண்டைந்தனர். சிவபெருமானின் அவதாரம் என்று நம்பப்படும் சுவாமி கொரகஜாவுக்கு முன் அவர்கள் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு நவாஸ் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜோகட்டேவில் வசிக்கும் அப்துல் ரஹீம் மற்றும் தவுபீக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களது கூட்டாளியான நவாஸின் அகால மரணத்திற்குப் பிறகு இருவரும் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 153 (ஏ) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ| Austria-வில் உள்ளது அமர்நாத் போன்ற பனியாலான சிவலிங்கம்: தரிசனம் பெற குவியும் பக்தர்கள்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News