230 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசம் மாநிலத்தில் வரும் நவம்பர் 28, 2018-ஆம் நாள் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் ஐந்தே நாட்கள் உள்ள நிலையில் தேசிய கட்சி மற்றும் மாநில கட்சிகள் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
மத்திய பிரதேசம் மாநிலத்தை பொறுத்தவரை ஆட்சி அமைப்பதில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக கட்சி முதல் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான தங்கள் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவும், கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியை கைப்பற்ற முடியாத நிலையில், இம்முறை ஆட்சியை கைப்பற்றும் முயற்ச்சியில் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இன்று மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னால் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் கட்சியின் அமைச்சருமான நவஜோத் சிங் சித்து, பிரதமர் மோடியை தாக்கி பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, "2014-ல் இருந்த பிரதமர் மோடியின் அலை, தற்போது மக்களுக்கு பேரழிவாக மாறியுள்ளது. மோடி அலை விஷமாக மாறியுள்ளது. பிரதம மந்திரி நாட்டின் பெருவணிகக் குழுக்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு ஒரு கைப்பாவையாக செயல்படுகிறார் எனக் குற்றம் சாட்டினார்.
2014 ki Modi leher ab aam aadmi ke liye qehar ban gayi hai, zehar ban gayi hai. Modi Sahab sirf poonjipatiyon ki katputhli ban ke reh gaye hain: Navjot Singh Sidhu in Bhopal pic.twitter.com/iR0fQc0df3
— ANI (@ANI) November 23, 2018