மீனவர்களை தேடும் பணி தொடரட்டும்: கேரள அரசு!

ஓகி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களை தொடர்ந்து கூடுதலாக 10-நாட்களுக்குத் தொடர்ந்து தேட வேண்டும் என்று கடலோர காவல் படை, விமானப் படைக்கு கேரள அரசு வேண்டுகோள். 

Last Updated : Dec 10, 2017, 04:00 PM IST
மீனவர்களை தேடும் பணி தொடரட்டும்: கேரள அரசு! title=

ஓகி புயலில் சிக்கி கேரளா, தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஏராளமானோர் காணாமல் போயினர்.

இதை தொடந்து கேரளாவில் காணாமல் போன மீனவர்களை மேலும் 10 நாட்களுக்கு தேட வேண்டும் என்று கேரளா மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இதுதொடர்பாக தென் பிராந்திய கப்பல் படை அட்மிரல் ஆர்.நட்கர்னி, விமானப் படை மார்ஷல் ராகேஷ் குமார் சிங், மும்பை கடலோர காவல் படை கமாண்டர் கூடுதல் இயக்குநர் ஜெனரல் கே.நடராஜன் ஆகியோருக்கு கேரள தலைமை செயலர் கே.எம்.ஆப்ரகாம் அவசர கடிதம் அனுப்பி உள்ளார்.

மேலும், கேரள முதல்வர் பினராயி விஜயன் டெல்லி வந்துள்ளார். பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவர் சந்தித்து மீனவர்கள் குறித்து பேச உள்ளார். 

Trending News