Himachal Pradesh-ல் பயங்கர நிலச்சரிவு: 4 வாகனங்கள் புதைந்தன, 45 பேரைக் காணவில்லை!!

இமாச்சல பிரதேசத்தின் கின்னூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்தார், சுமார் 30 பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 11, 2021, 03:54 PM IST
Himachal Pradesh-ல் பயங்கர நிலச்சரிவு: 4 வாகனங்கள் புதைந்தன, 45 பேரைக் காணவில்லை!! title=

இன்று பிற்பகல் இமாச்சல பிரதேசத்தின் கின்னூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்தார், சுமார் 30 பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கிண்ணூரில் உள்ள ரெகாங் பியோ-சிம்லா நெடுஞ்சாலையில் மதியம் 12.45 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஒரு லாரி, அரசு பேருந்து மற்றும் பிற வாகனங்கள் இடிபாடுகளில் புதைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சிம்லா செல்லும் ஒரு பேருந்தில் 40 பேர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 25-30 பேர் இந்த விபத்தில் புதைந்திருக்கலாம் அல்லது இன்னும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது. டிரைவர் உட்பட 6 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்புப் பணிகளுக்காக இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ITBP) குழுக்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படையும் (NDRF) வரவழைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தெரிவித்தார்.

"மீட்புப் பணிகளைச் செய்ய நான் காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். NDRF உஷார் நிலையில் உள்ளது. ஒரு பேருந்து மற்றும் ஒரு கார் ஒன்றோடொன்று மோதியிருக்கலாம் என்ற தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. விரிவான தகவலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்," என்று திரு தாக்கூர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், திரு தாக்கூருடன் பேசி, அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தனர்.

கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் இமாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.

கடந்த மாதம், கிண்ணூரின் மற்றொரு பகுதியில், பெரிய பாறாங்கற்கள் கார்கள் மீது விழுந்ததில் ஒன்பது சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.

ஆன்லைனில் பரவிய ஒரு வீடியோவில், கற்பாறைகள் கீழ்நோக்கி உருண்டு பாலத்தில் மோதியதை காண முடிகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News