கேரளாவில் (Kerala) கடந்த சில மாதங்களில் வரதட்சணை கொடுமையால் நடந்த கொலை, தற்கொலை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் வரதட்சணை முறையை ஒழிக்க, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் (Arif Mohammed Khan), புதுமையான முயற்சியை பரிந்துரைத்தார்.
மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் (Vice-chancellors), மாணவர்களை கல்லூரியில் சேர்க்கும் போதும், அவர்களுக்கு பட்டம் அளிக்கும் போதும், ‘வரதட்சணை வாங்க மாட்டேன்’ மற்றும் வரதட்சணை கொடுக்க மாட்டேன் என உறுதி மொழி பத்திரத்தில் மாணவர்களிடமும், அவர்களது பெற்றோர்களிடமும் கையெழுத்து வாங்க வேண்டும் என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் உத்தரவிட்டிருந்தார்.
இதனை பல பல்கலைகழகங்கள் பின்பற்றி வருகின்றன. அந்த வகையில், கேரள மாநிலத்தின் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் (Calicut University), வரதட்சணை வாங்க மாட்டேன், வரதட்சணை கொடுக்கவும் மாட்டேன் என உறுதி மொழி பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய பிறகு மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் வழங்கி வருகிறது.
ALSO READ | ஓணம் பம்பர் லாட்டரியில் ஆட்டோ டிரைவருக்கு அடித்த ஜாக்பாட்
உறுதி மொழியை மீறி வரதட்சணை வாங்கினால் பல்கலைகழகத்தில் வாங்கிய டிகிரி பட்டம் ரத்து செய்யப்படும் என கோழிக்கோடு பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
இதே போன்று கடந்த மாதம் கொச்சியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கேரள மீன்வள மற்றும் கடல்சார் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகள் உட்பட, 386 மாணவர்கள், வரதட்சணை வாங்க மாட்டேன், வரதட்சணை கொடுக்க மாட்டேன் என கையொப்பமிட்ட உறுதி மொழி பத்திரங்களை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் வரதட்சணை கொடுமையால் திருமணமான பல இளம் பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
ALSO READ:SCO Summit 2021: ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இன்னும் உதவ விரும்புகிறோம்: பிரதமர் மோடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR