கேரளாவில் கனமழை! நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உள்பட 7 பேர் பலி

கடந்த சில நாட்களாக கேரளாவில் தென் மேற்கு பருவமழை காரணமாக கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

Last Updated : Jun 15, 2018, 08:42 AM IST
கேரளாவில் கனமழை! நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உள்பட 7 பேர் பலி title=

கடந்த சில நாட்களாக கேரளாவில் தென் மேற்கு பருவமழை காரணமாக கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

தொடர் மழை காரணத்தால் கோழிக்கோடு மாவட்டம் தாமரைச்சேரி உள்ளிட்ட பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள், வயலில் அடித்துச்செல்லப்பட்டன.

இந்த நிலச்சரிவில் சிக்கி தற்போது 3 குழந்தைகள் உள்பட 7 பேர் இறந்தனர். மேலும் 9 பேர் மாயமானார்கள். இதையடுத்து சிறப்பு தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்தது. நிலச்சரிவில் சிக்கிய 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மாயமான 9 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் நிலச்சரிவால் கோழிக்கோடு-கொள்ளேகால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. 

 

 

Trending News