Kerala Assembly Election Results 2021: கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை எட்டு மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபத்திய அறிக்கைகளின்படி, 140 தொகுதிகளைக் கொண்ட கேரள சட்டமன்றத்தில் 83 தொகுதிகளில் எல்.டி.எஃப் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் 45 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை, அதாவது இன்று எண்ணப்பட்டு வருகின்றன. சமீபத்திய தகவல்களின் படி கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) 83 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) 45 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
துவக்கப் போக்குகளின்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பாலக்காடு, திருச்சூர் மற்றும் நெமோமில் முன்னணியில் இருந்தது. கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா ஆகியோர் அந்தந்த தொகுதிகளில் முன்னணியில் உள்ளனர் என்று இதுவரையிலான போக்குகள் தெரிவிக்கின்றன.
140 தொகுதிகள் கொண்ட சட்டசபைக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. COVID-19 நெறிமுறைகளின்படி வாக்கு எண்ணிக்கைக்கான நேர்த்தியான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர்.
கேரளாவில் சுமார் 40 ஆண்டுகளாக, எல்.டி.எஃப் மற்றும் யு.டி.எஃப் மாறி மாறி ஆட்சியமைத்து வருகின்றன. தற்போது கேரளாவில் இருக்கும் போக்கு தொடர்ந்து, அங்கு எல்.டி.எஃப் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஆட்சியை பிடித்தால், இது அவர்கள் செய்த வரலாற்று சாதனையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்குப் பிறகான கருத்துக் கணிப்புகளும், ஆளும் எல்.டி.எஃப் மீண்டும் ஆட்சிக்கு வந்து சரித்திரம் படைக்கும் என்றே கணித்திருந்தன. இருப்பினும், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் தலைவர்கள் தேர்தலுக்குப் பிறகான கருத்துக் கணிப்புகளை புறக்கணித்து, மாநிலத்தில் தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வருவது குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த தேர்தலில் கேரளாவில் தனது தடம் பதிக்க பாஜகவும் அதிக முயற்சிகளை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR