நியூடெல்லி: 2002 கோத்ரா கலவரத்தின் போது தன்னைக் கூட்டுப் பலாத்காரம் செய்து கொலை செய்த 11 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ததை எதிர்த்து பில்கிஸ் பானோ தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி பேலா எம் திரிவேதி விலகினார். பில்கிஸ் பானுவின் மனு குறித்து அவரது வழக்கறிஞர் நேற்று நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
அப்போது, விரைவில் இந்த சீராய்வு மனுவுக்கான விசாரணை தேதி பட்டியலிடப்படும் என, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதில் இருந்து ஒரு நிதிபதி விலகியிருக்கிறார்.
Supreme Court judge, Justice Bela M Trivedi recuses herself from hearing the plea filed by Bilkis Bano, challenging the pre-mature release of 11 convicts, who had gangraped her and murdered her family members during the 2002 Godhra riots. pic.twitter.com/aCHbLDO1nt
— ANI (@ANI) December 13, 2022
தன்னை பலாத்காரம் செய்த 11 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு எதிராக பில்கிஸ் பானோ மனு தாக்கல் செய்திருந்தார். 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது, கூட்டுப் பலாத்காரம் செய்த 11 பேரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் பில்கிஸ் பானு மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும் படிக்க | பில்கிஸ் பானோ கூட்டு பலாத்கார குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக மறுஆய்வு மனு
முன்னதாக, கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கு குற்றவாளிகள் 11 பேரும், தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக உச்சநீதிமன்றத்தை அணுகினார்கள். 14 ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்றுவந்த நிலையில், குற்றவாளிகள் விடுதலைக் குறித்து குஜராத் மாநில அரசு ஒரு குழுவை அமைத்து முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
இதனையடுத்து 10 பேர் கொண்ட குழுவை குஜராத் மாநில அரசு அமைத்தது. 1992 ஆம் ஆண்டு நிவாரண விதிகளைப் பயன்படுத்தி, 11 குற்றவாளிகளையும் குஜராத் அரசு விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 11 குற்றவாளிகளை விடுதலை செய்யும் தீர்ப்பு தொடர்பாக பில்கிஸ் பானோ மறுஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
2002 பிப்ரவரி 27 அன்று, குஜராத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ஒரு கும்பலால் எரிக்கப்பட்டதில் 59 பேர் இறந்தனர். இந்த கோத்ரா சோகத்திற்குப் பிறகு, பில்கிஸ் பானோ கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது பில்கிஸ் பானு ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார், இந்த சம்பவத்தில் அவரது குழந்தை கொலை கொல்லப்பட்டது.
மேலும் படிக்க | RRR: எஸ்.எஸ்.ராஜமௌலியின் சரித்திரத் திரைப்படம் கோல்டன் குளோப் விருது பெறுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ