சர்வதேச விதிமுறைப்படி கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை: ICMR

சர்வதேச விதிமுறைப்படி கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை மேற்கொள்ளப்படும் என ஐ.சி.எம்.ஆர் திட்டவட்டம்..!

Last Updated : Jul 4, 2020, 06:51 PM IST
சர்வதேச விதிமுறைப்படி கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை: ICMR title=

சர்வதேச விதிமுறைப்படி கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை மேற்கொள்ளப்படும் என ஐ.சி.எம்.ஆர் திட்டவட்டம்..!

பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் உருவாக்கிய ஒரு நம்பிக்கைக்குரிய உள்நாட்டு கோவிட் -19 தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை விரைவுபடுத்துவதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சனிக்கிழமை உறுதிபடுத்தியது. மேலும், சர்வதேச விதிமுறைப்படி கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை மேற்கொள்ளப்படும் என ICMR தகவல் தெரிவித்துள்ளது. மனிதர்கள், விலங்குகளிடம் சர்வதேச விதிமுறைப்படியே கொரோனா தடுப்பு ,மருந்து பரிசோதிக்கப்படும் என கூறியுள்ளது.

புனேவைச் சேர்ந்த பாரத் பயோடெக் (Bharat Biotech International Ltd., ) தயாரித்து வரும் கொரோனா தடுப்பு மருந்தான BBV152-யை மனிதர்களிடத்தில் பரிசோதனை செய்ய ICMR பரிந்துரை செய்தது. முதற்கட்ட சோதனையாக விலங்குகளுக்குச் செலுத்தப்பட்டதில் வெற்றி கிடைத்ததால் அடுத்தகட்ட சோதனைக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. இதனிடையே இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைமையகமும் இந்தப் பரிசோதனைக்கு அனுமதி அளித்துள்ளது. 

Image

அதன்படி ஜூலை 7 முதல் சோதனை முயற்சியாக கொரோனா தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட உள்ளது என ICMR தெரிவித்துள்ளது. மேலும், சோதனை முயற்சி வெற்றி அடைந்தால் ஆகஸ்ட் 15 முதல் கிசிச்சைக்கு பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தியா அளவில் 12 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னை அருகே காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனை, விசாகப்பட்டினம், ரோஹ்டாக், டெல்லி, பாட்னா, பெல்காம், நாக்பூர், கொரோக்பூர், ஹைதராபாத், ஆர்யா நகர், கான்பூர் மற்றும் கோவா ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

READ | நமது வீட்டிற்கு விருந்தினர்கள் வருகையில் இந்த விஷயங்களை பின்பற்றுங்கள்..!

பரிசோதனைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகள் மருத்துவ பரிசோதனையைத் தொடங்குவது தொடர்பான அனைத்து ஒப்புதல்களையும் விரைவாகப் பெற தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே ICMR-ன் இந்த முயற்சிக்குப் பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். ஆனால் இந்தச் சோதனைக்கு நாள் குறித்ததற்கு ஆராய்ச்சியாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டே தடுப்பு மருந்து பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக ICMR விளக்கமளித்துள்ளது. மேலும், இந்தப் பரிசோதனையின்போது பாதுகாப்பில் எந்தவொரு சமரசமும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News