ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ கைது செய்துள்ளது. ஏற்கனவே 5 நாள் விசாரித்த நிலையில் இன்னும் மூன்று நாட்கள் காவல் நீட்டிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
#KartiChidambaram sent to 3 more days of CBI custody by Special CBI court. #INXMediaCase pic.twitter.com/Lsv4kvNH0c
— ANI (@ANI) March 6, 2018
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இன்றுடன் சி.பி.ஐ., காவல் முடிந்ததையடுத்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். கார்த்தி சிதம்பரத்திற்கு மேலும் 8 நாள் காவலை நீட்டிக்கக் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு ப.சிதம்பரம், நளினி சிதம்பரம் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விசாரணை தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராகி விளக்க வேண்டும் என்று மத்திய அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் புதிய ரிட் மனு ஒன்றை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அமர்வு முன்பாக அவருடைய வக்கீல் நேற்று தாக்கல் செய்தார்.
அதில், சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்ததன் அடிப்படையில் இதுபோன்ற சம்மன்களை அமலாக்கத்துறை அனுப்புவதற்கு எவ்வித அதிகார வரம்பும் கிடையாது. எனவே இந்த சம்மன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறி இருந்தார்.
அப்போது, ‘ஏற்கனவே இதுதொடர்பாக நிலுவையில் உள்ள மனுக்களுடன் இதையும் நாளை (அதாவது இன்று) நடைபெறும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக‘ நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்திருந்த மனு மீதும் இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை சம்மன்களை ரத்து செய்யக் கோரி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த மனு விசாரணையின் போது அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை மறுநாள் ஒத்திவைத்தது.
Delhi: Nalini Chidambaram reaches Patiala House court ahead of hearing against #KartiChidambaram in #INXMediaCase pic.twitter.com/HUIzud6kzF
— ANI (@ANI) March 6, 2018