11 லட்சம் கிலோ மீட்டர் சுற்றி ஓய்ந்த INS VIRAAT..!!!

உலகின் மிக நீண்ட காலமாக பணியாற்றிய போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விராட் (INS VIRAAT) போர் கப்பலை உடைக்கும் பணி குஜராத்தில் உள்ள ஆலங்கில் தொடங்கியது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 29, 2020, 05:09 PM IST
  • உலகின் மிக நீண்ட காலமாக பணியாற்றிய போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விராட் (INS VIRAAT) போர் கப்பலை உடைக்கும் பணி குஜராத்தில் உள்ள ஆலங்கில் தொடங்கியது.
  • ஐ.என்.எஸ் விராட்டை ஒரு அருங்காட்சியகமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன
  • ஐ.என்.எஸ் விராட் 1959 இல் பிரிட்டிஷ் கடற்படையில் சேர்க்கப்பட்டது. அதன் பெயர் அப்போது எச்.எம்.எஸ் ஹெர்மெஸ்.
11 லட்சம் கிலோ மீட்டர் சுற்றி ஓய்ந்த INS VIRAAT..!!! title=

இந்திய கடற்படைக்கு பெருமை சேர்த்த INS VIRAAT போர் கப்பலுக்கு உணர்ச்சிப் பூர்வமான பிரிய விடை கொடுக்கப்பட்டது. குஜராத்தின் அலங்கில் திங்கட் கிழமை, அதாவது செப்டம்பர் 28 மிகவும்  மறக்கமுடியாத நாளாக இருந்தது. உலகின் மிக நீண்ட காலமாக பணியாற்றிய போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விராட் (INS VIRAAT) போர் கப்பலை உடைக்கும் பணி குஜராத்தில் உள்ள ஆலங்கில் தொடங்கியது. 

இந்த போர்க்கப்பல், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கடற்படையில் இருந்து  ஓய்வு பெற்றது.  விமானம் தாங்கி கப்பல் இந்திய கடற்படையில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பணியாற்றியது. இந்த பிரம்மாண்டமான கப்பலில் 26 போர் விமானங்களை நிறுத்தி வைக்க முடியும்.

INS VIRAAT  பயணித்த தூரம் சுமார் 11 லட்சம் கிலோமீட்டர். ஐ.என்.எஸ் விராட் என்ற மிகப் பெரிய போர்க்கப்பல் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. ஐ.என்.எஸ் விராட் குஜராத்தின் ஆலங்கில் உள்ள உலகின் மிகப்பெரிய கப்பலின் பாகங்களை பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகளில் உடைக்கப்படும். இந்த வரலாற்று சிறப்பு மிக்க போர்க்கப்பல் 11 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்துள்ளதாக கப்பல் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். இது பூமியை 27 தடவை சுற்றி வந்ததற்கு சமம்.

கொச்சின் கப்பல் தளம் மற்றொரு பெரிய போர்க்கப்பலை உருவாக்கி வருவதாக  கூறிய கப்பல் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஐ.என்.எஸ் விராட்டை ஒரு அருங்காட்சியகமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் இந்த திட்டத்தை எங்களால் செயல்படுத்த முடியவில்லை என்று அவர் கூறினார். ஒரு நிபுணர் குழு தனது அறிக்கையில் , இந்த போர் கப்பலை 10 ஆண்டுகளுக்கு மேல் வைத்துக் கொள்ள முடியாது என கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க | மூக்கை நீட்டி மாட்டிக்கொள்ளும் சீனாவின் latest பிதற்றல்!!

ஐ.என்.எஸ் விராட் 1959 இல் பிரிட்டிஷ் கடற்படையில் சேர்க்கப்பட்டது. அதன் பெயர் அப்போது எச்.எம்.எஸ் ஹெர்மெஸ். 1984 ஆம் ஆண்டில் இந்தியா இதனை வாங்கி,  அதி நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு, INS VIRAAT என்ற பெயரில் 1987, மேம் மாதம் 12ம் தேதி இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது.

INS VIRAAT பல முக்கிய நடவடிக்கைகளில் பங்கேற்றது. இவற்றில் 'ஆபரேஷன் ஜூபிடர்' மற்றும் இலங்கையில் 1989 அமைதி காக்கும் மிஷன் ஆகியவை அடங்கும். இது 2001 ல் இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதலுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் பராக்ரம் என்னும் நடவடிக்கையிலும் ஈடுபட்டது.

இந்த போர் கப்பல் 2012 ல் ஆண்டிலேயே ஓய்வு பெறும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யாவின் வருகை தாமதமாக இருந்ததால், இது ஓய்வு பெறுவதை ஒத்திவைக்க வேண்டியிருந்தது. ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா 2014 இல் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டார். ஐ.என்.எஸ் விராட் மார்ச் 6, 2017 அன்று ஓய்வு பெற்றது.

மேலும் படிக்க | ₹2,290 கோடி மதிப்பிலான இராணுவ தளவாடங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News