இடைக்கால பட்ஜெட் 2024: வரி செலுத்துவோர் எதிர்பார்க்கும் 6 முக்கிய மாற்றங்கள்

Interim Budget 2024: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட்டில் வரி செலுத்துவோர் தரப்பில் பெரிய மாற்றங்கள் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 1, 2024, 07:23 AM IST
  • இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்
  • நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்
  • வரி விதிப்பில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பு
இடைக்கால பட்ஜெட் 2024: வரி செலுத்துவோர் எதிர்பார்க்கும் 6 முக்கிய மாற்றங்கள் title=

India Budget 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் அரசு முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்யும். அதுவரை அரசு நிர்வாகம் செயல்பட இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த சூழலில் பொதுமக்கள், குறிப்பாக வரி செலுத்துவோர், நிதி அமைச்சரிடமிருந்து சில முக்கிய அறிவிப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இது இடைக்கால பட்ஜெட் என்பதால் பெரிய அறிவிப்புகள் இருக்காது. சில குறிப்பிட்ட மாற்றங்கள் தொடர்பான அறிவிப்புகள் வேண்டுமானால் இருக்கலாம். அந்தவகையில் வரி தொடர்பான எதிர்பார்ப்புகள் என்ன? என்பதை பார்க்கலாம்.

வரி தள்ளுபடி மற்றும் விலக்கு

நடுத்தர வருமான வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் வரி தள்ளுபடியை ரூ.7.5 லட்சமாக உயர்த்துவதற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. இந்த மாற்றம் செலவினத்தையும் முதலீட்டையும் ஊக்குவித்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவி செய்யக்கூடும் என்பதால் இடைக்கால பட்ஜெட்டில் இதில் மாற்றம் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. 

மேலும் படிக்க | இன்றே கடைசி நாள்.. FASTagல் அதிரடி மாற்றம், உடனே படிக்கவும்

மூலதன ஆதாய வரி

மூலதன ஆதாய வரி முறையை திருத்துவதற்கான கோரிக்கைகள் அதிகம் வந்துள்ளன. தற்போது, பல்வேறு சொத்துக்களுக்கு வெவ்வேறு வரி ஸ்லாப்கள் உள்ளன. இதனை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போதைய மூலதன ஆதாய வரி கட்டமைப்பை எளிமைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இடைக்கால பட்ஜெட்டில் எந்த முக்கிய திருத்தமும் எதிர்பார்க்கப்படாவிட்டாலும், பிரிவு 54F, பிரிவு 54EC போன்றவற்றின் கீழ் சலுகைகளின் கிடைக்கும் வழிவகை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

புதிய வரி முறை

புதிய வரியில் பல்வேறு மாற்றங்கள் வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். இடைக்கால பட்ஜெட்டில் இந்த அறிவிப்புகள் முழுமையாக இடம்பெற வாய்ப்புகள் இல்லை என்றாலும் நிவாரணமாக ஏதேனும் கூடுதல் அம்சங்களை சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனை இடைக்கால பட்ஜெட் அறிவிப்பில் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளனர். 

NPS விலக்கு

புதிய வரி முறையின் கீழ் வரி செலுத்துவோர் தற்போது தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) ரூ.50,000க்கு மேற்பட்ட பங்களிப்புகளுக்கு பிரிவு 80CCD (1B) கீழ் விலக்கு பெற தடைசெய்யப்பட்டுள்ளனர். இந்த நன்மையை புதிய வரி முறையின் கீழ் விரிவுபடுத்த வேண்டுமென்ற கோரிக்கை உள்ளது.

காப்பீட்டுக் கொள்கைகளில் இருந்து GST நீக்குதல்

இடைக்கால பட்ஜெட்டில் காப்பீட்டுக் கொள்கைகளில் இருந்து GST நீக்குவது சம்பளம் பெறுபவர்களின் விருப்பங்களில் மற்றொரு கோரிக்கையாகும். இந்த நடவடிக்கை காப்பீட்டு பிரீமியங்களைக் குறைத்து, காப்பீட்டை மிகவும் குறைவானதாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 80C-ன் கீழ் வரி விலக்கு வரம்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளது.

மேலும் படிக்க | Budget 2024: நாளை பட்ஜெட் தாக்கல், இன்றே அரசின் பரிசு.. குறைகிறது மொபைல் போன்கள் விலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News