அசாமில் முதன் முறையாக இ-பட்ஜெட் தாக்கல்!

அசாம் மாநிலத்தில் இன்று இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட உள்ளது!

Last Updated : Mar 12, 2018, 07:32 AM IST
அசாமில் முதன் முறையாக இ-பட்ஜெட் தாக்கல்! title=

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இ -பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட உள்ளது.

அசாம் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் முதல்வராக சர்பானந்தா சோனோவால் இருந்துவருகிறார். இன்று நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தொடரில் மாநில நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சார்மா தாக்கல் செய்ய உள்ளார். தற்போது சட்டசபையில் முதன் முறையாக இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 

இது குறித்து நிதித்துறை அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறுகையில் சட்டசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் டேப்லெட் வழங்கப்பட உள்ளது. இதில் பட்ஜெட் குறித்த அனைத்துக்குமான நிதி நிலை விவரங்கள் தெரிவிக்கப்ப ட்டிருக்கும். 

தொடர்ந்து பட்ஜெட் செய்தி சேகரிக்க வருகை தரும் நிருபர்களுக்கு பென்டிரைவ் வழங்கப்படும் என கூறினார். மேலும் பட்ஜெட் விவரங்கள் கூகுள் ஆப் மூலமும் தெரிந்து கொள்ள முடியும் என்றார்.

Trending News