அஸ்ஸாம்-மிசோரம் எல்லை பிரச்சனை தொடர்பக பிரதமர் அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திடம், அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் (Sarbananda Sonowal) தொலைபேசியில் பேசினார். சோனோவால் தனது மிசோரம் முதல்வர் சோரம்தங்காவையும் ( Zoramthanga) தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
அசாம் மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால், அங்கு பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடுமையான வெள்ளப் பெருக்கினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 44-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா நதி உட்பட பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுவதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கி மூழ்கியுள்ளன.
அஸ்ஸாம் மாநிலத்தின் முதல் பாஜக முதல்வராக சர்பானந்த சோனோவால் இன்று மாலை பதவியேற்றார்.
அஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் 126 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-வுக்கு 60 இடங்களும், அதன் கூட்டணி கட்சிகளான அசாம் கணபரிஷத் கட்சிக்கு 14 இடங்களும், போடோ மக்கள் முன்னணிக்கு 12 இடங்களும் கிடைத்தன.
அஸ்ஸாம் மாநிலத்தின் ஆளுநர் பி.பி.ஆச்சாரியா அவர்கள் சோனோவாலுக்கும் அவருடன் பதவியேற்ற மற்ற அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.