மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே சிபிஎஸ்இ பாடப்பிரிவுகள் நீக்கம்; வேறு உள்நோக்கமில்லை என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம்..!
மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே CBSE பாடப்பிரிவுகள் நீக்கம்; வேறு உள்நோக்கமில்லை என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.நிபுணர்களின் ஆலோசனை, பரிந்துரைகளை பின்பற்றியே சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் COVID-19 வெடிப்பு காரணமாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) பாடத்திட்டங்களைக் குறைப்பது தொடர்பாக நடந்து வரும் குற்றசாட்டுக்களுக்கு மத்தியில், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் வியாழக்கிழமை (ஜூலை 9) விமர்சகர்களுக்கான முற்றுப்புள்ளியை வைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து CBSE பாடத்திட்டத்தை 30 சதவீதம் வரை குறைத்துள்ளதாக மத்திய அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 190 பாடத்திட்டங்களில் அரசியல் அறிவியல் பிரிவில் ஜனநாயக உரிமைகள், இந்தியாவில் உணவு பாதுகாப்பு, கூட்டாட்சி, குடியுரிமை மற்றும் மதச்சார்பின்மை போன்ற முக்கிய அத்தியாயங்களை நீக்கியிருந்தது. இது பல்வேறு தரப்பிலும் பெரும் விமர்சனங்களை கிளப்பியிருந்தது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது.. "#CBSESyllabus இலிருந்து சில தலைப்புகளை விலக்குவது குறித்து பல அறிவிக்கப்படாத குற்றசாட்டுகள் உள்ளன. இந்த கருத்துக்களில் உள்ள சிக்கல் என்னவென்றால், தவறான கதைகளை சித்தரிக்க தலைப்புகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் அவர்கள் பரபரப்பை நாடுகிறார்கள்," என நிஷாங்க் குறிப்பிட்டுள்ளார்.
There has been a lot of uninformed commentary on the exclusion of some topics from #CBSESyllabus. The problem with these comments is that they resort to sensationalism by connecting topics selectively to portray a false narrative.
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) July 9, 2020
மேலும், அவர் கூறுகையில், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே CBSE பாடப்பிரிவுகள் நீக்கம். வேறு உள்நோக்கமில்லை. நிபுணர்களின் ஆலோசனை, பரிந்துரைகளை பின்பற்றியே CBSE பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. கல்வியில் அரசியல் செய்வதை விட்டு விட்டு, நமது அரசியலில் அதிக கல்வியை புகுத்துவோம் என அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.