‘புலி’ சாலையைக் கடப்பதெல்லாம் ஒரு செய்தியா ?!

Tiger Crossing Road In Style : ஹாரன் சத்தம் இல்லை ; கூக்குரல் இல்லை ; சீண்டல்கள் இல்லை ; வேட்டைக்காரனுக்கு மரியாதையோடு வழிவிட்ட மக்கள். கம்பீரமாக சாலையைக் கடந்த புலி!  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jul 24, 2022, 04:15 PM IST
  • புலி சாலையைக் கடப்பதெல்லாம் செய்தியா ?
  • இந்த வீடியோக் காட்சி சொல்ல வருவது என்ன ?
  • காடு யாருடையது ? அதில் நம் பங்கு என்ன ?
‘புலி’ சாலையைக் கடப்பதெல்லாம் ஒரு செய்தியா ?! title=

வனவிலங்குகள் தொடர்பாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அடிக்கடி வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. பொதுவாக அப்படி பகிரப்படும் வீடியோக்களில் காட்டு யானை, புலியே அதிகம் இடம்பெறுகிறது. காட்டு யானை சாலையை கடப்பது மாதிரியும், வழியில் செல்லும் வாகனங்களை துரத்துவது மாதிரியும், தாக்குவது மாதிரியுமான வீடியோக்களே. 

மேலும் படிக்க | இது புல் தின்னும் புலி அல்ல! காரை புல் பண்ணும் புல்லர் புலி! வைரலாகும் வீடியோ

இல்லையென்றால், யானையை மனிதர்கள் துரத்தும் வீடியோ அல்லது சீண்டும் வீடியோக்கள். இதுமாதிரியான வீடியோக்கள் பொதுவாக யானைகள் மீதான ஒருவித அச்சத்தையே வளரும் தலைமுறைக்கு உருவாக்குகின்றன. அவர்களது பார்வையில் யானை கொடிய மிருகமாக நினைவுகொள்ளப்படும் ஆபத்தான சூழலை நாமே உருவாக்குகிறோம். 

சமூக வலைதளம் என்னும் குப்பைத்தொட்டியில் எதுவும் இருக்கத்தானே செய்யும். முத்தாய்ப்பாக, அற்புதமான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம், ப்ராமபுரி - நாக்பிர் நெடுஞ்சாலையில் புலி ஒன்று சாலையைக் கடக்கிறது. இந்த இடம்வரை இது செய்தியல்ல. புலி என்றால் சாலையைக் கடக்கத்தானே செய்யும். அதில் என்ன இருக்கிறது என்ற கேள்வி நமக்குள் எழாமலில்லை. புலி சாலையைக் கடப்பதல்ல செய்தி ; அந்தப் புலிக்காக ஒட்டுமொத்த வாகனங்களும் நின்று சாலையை கடக்கும்வரை புலிக்காக காத்திருந்ததுதான் செய்தி!.

இதுமாதிரியான வனவிலங்குகள் சாலையைக் கடக்கும்போது ஒன்று வாகனங்களில் அடிபடுவது, கற்களைத் தூக்கி வீசுவது, ஹாரன் சத்தம் எழுப்பி வனவிலங்கை துன்புறுத்துவது என மனிதச் சமூகம் செய்யாத அட்டகாசங்கள் இல்லை. ஆனால், இந்தக் காட்சி கீழ்மையான சிந்தனையில் உள்ள மனிதர்களுக்கு கொடுத்த சம்மட்டி அடி போல தோன்றுகிறது. சாலையைக் கடக்கும் புலி, மின்னல் வேகத்தில் கடக்கும் காட்சிதான் பெரும்பாலும் தென்படும். ஆனால், இந்தக் காட்சியில் வெளிப்படும் புலியைக் கவனியுங்கள். அவசரமில்லை ; வேகமில்லை ; நின்று நிதானமாக கம்பீரமாக சாலையைக் கடக்கிறது. 

காடு புலிகளின் வீடு. அந்த இடத்தில் அதுதான் ராஜா. காட்டைக் கடக்கையில் அதே கம்பீரத்தோடுதான் ஒரு புலி சாலையைக் கடக்க வேண்டும். புலிகளின் வீட்டிற்குள் குறுக்கே நாம்தான் சாலையைத் திணித்துக் கடக்கிறோம். நாம்தான் அது செல்லும்வரை பொறுமைக் காக்க வேண்டும். அதுவும், எப்படி. இந்த வீடியோவில் வருவது மாதிரி, ராஜ மரியாதையுடன். அதுதான் காட்டிற்கு நாம் செலுத்தும் மரியாதை. அதுதான் புலிகளுக்கு நாம் கொடுக்கும் கௌரவம்.! ஏனெனில், நாம் அங்கிருந்து வந்தவர்கள்தானே!.

மேலும் படிக்க | தன் மகனை ஆசையாய் கொஞ்சும் புலி! வைரலாகும் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News