84 வயதான முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் அவர் தொடர்ந்து அழ்ந்த கோமா நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலையில் இருப்பதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும், அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், அவரது இரத்த ஓட்டம், இதயம் மற்றும் பல்ஸ் ரேட் ஆகியவை இயல்பாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். முகர்ஜி ஆகஸ்ட் 10 ஆம் தேதி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் காணப்பட்ட ஒரு உறைவை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவருக்கு நுரையீரல் தொற்றும் ஏற்பட்டது.
இந்தியாவின் 13 வது குடியரசுத் தலைவரான திரு.பிரணாப் முகர்ஜி 2012 முதல் 2017 வரை குடியரசுத் தலைவராக இருந்தார்.
மேலும் படிக்க | பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை: மருத்துவமனை அறிக்கை