பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் பீகார் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்து வருகிறது.
மேலும் அங்குள்ள மகாநந்தா, கங்காய் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.
பீகார் மாநிலத்தில் பெய்துவரும் கன மழையால் பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீட்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய மக்களை படகுகளில் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அரசு வெளியிட்ட அறிக்கையின்படி 72 ஆக இருந்த பலியானவர்களின் எண்ணிக்கை, தற்போது 120 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், அம்மாநிலத்தைச் சேர்ந்த 15 மாவட்டங்களில் இருக்கும் 73.44 லட்சம் மக்கள் வெள்ளப்பெருக்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.