நொய்டா: அதிர்ச்சிகரமான மோசடி சதியை உத்தரப்பிரதேச மாநில போலீசார் முறியடித்துள்ளனர். நடிகை ஐஸ்வர்யா ராயின் போலி பாஸ்போர்ட் மீட்கப்பட்டு, இது தொடர்பாக விசாரனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யாவின் போலி பாஸ்போர்ட் விவகாரம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே ஆதிர்ச்சியையும், பல கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. நொய்டாவில் கைப்பற்றப்பட்ட நடிகை ஐஸ்வர்யா ராயின் பாஸ்போர்டை வைத்திருந்த நைஜீரிய கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். இதன் பின் என்ன சதிவேலை இருக்கிறது என்பதை நொய்டா போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக 3 நைஜீரியர்களை கைது செய்த நொய்டா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை ஐஸ்வர்யா ராயின் பாஸ்போர்ட்டை எதற்காக பயன்படுத்த முயன்றனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கும்பல், ஓய்வு பெற்ற கர்னல் ஒருவரிடம் சுமார் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த ஏக் உஃபெரெமுக்வே, எட்வின் காலின்ஸ் மற்றும் ஒகோலோய் டாமியன் ஆகிய மூன்று நைஜீரிய பிரஜைகளை நொய்டா காவல்துறை மற்றும் கிரெனோ சைபர் செல் கைது செய்துள்ளதாக நொய்டா காவல்துறை துணை ஆணையர் (மண்டலம் 3) அபிஷேக் வர்மா தெரிவித்தார்.
மேலும் படிக்க | ஸ்மார்டா யோசிச்சு ஜியோ பிளான் ரீச்சார்ஜ் பண்ணுங்க! பணத்தை மிச்சப்படுத்துங்க
மருந்து நிறுவனம் என்ற பெயரில் மோசடி
நொய்டாவின் பீட்டா-2 காவல் நிலையம் மற்றும் சைபர் செல் ஆகியவை மருந்து நிறுவனம் பெயரில் மோசடி செய்த நைஜீரிய கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்துள்ளனர். ஓய்வு பெற்ற கர்னல் ஒருவரிடம் இருந்து சுமார் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த கும்பலிடம் இருந்து பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் போலி பாஸ்போர்ட்டையும் போலீசார் மீட்டுள்ளனர்.
ஐஸ்வர்யாவின் பாஸ்போர்ட்டை என்ன செய்ய நினைத்தீர்கள்?
ஐஸ்வர்யா ராயின் போலி பாஸ்போர்ட்டை ஏன் பயன்படுத்த வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலிகைகள் முதல் டேட்டிங் மோசடி வரை
மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள், நிறுவனங்களின் பிரதிநிதிகள் போல் நடித்து மூலிகைகளை அதிக விலைக்கு வாங்குவதாக உறுதியளித்து பலரிடம் மோசடிகளை செய்துள்ளனர். இது தவிர, மேட்ரிமோனியல் இணையதளங்கள் மற்றும் டேட்டிங் ஆப்ஸ் மூலமாகவும் இந்த கும்பல், தொடர்ந்து மக்களை குறிவைத்து வந்தது. 'அபோட் பார்மாசூட்டிகல்ஸ்' நிறுவனம் உள்ளிட்ட பிற நிறுவனங்களின் பிரதிநிதிகள் போல் வேடமணிந்து இந்தக் கும்பல் மக்களை குறிவைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ஓய்வுபெற்ற கர்னலை ஏமாற்றி, மார்பகப் புற்றுநோய்க்கான மருந்து தயாரிப்பதாக மோசடி செய்து, 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் விசா மற்றும் பாஸ்போர்ட் கூட இல்லை என்பது அதிர்ச்சியை மட்டுமல்ல, இந்த கும்பலின் மோசடி மற்றும் ஏமாற்று வேலையின் உச்சக்கட்டத்தை உணர்த்துவதாக உள்ளது.
மேலும் படிக்க | Pope Francis: கருவூலம்! தேவாலயம்! பள்ளிவாசல்! 2500 ஆண்டு புராதன மதத்தலம் சீரமைப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ