'அரசியலமைப்புக்கு எதிரானது...' தேர்தல் பத்திரங்கள் ரத்து - உச்ச நீதிமன்றம் அதிரடி

Electrol Bonds, Supreme Court: தேர்தல் பத்திர முறை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருப்பதாக கூறி அதனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Written by - Sudharsan G | Last Updated : Feb 15, 2024, 12:42 PM IST
  • 2018இல் பாஜக அரசால் தேர்தல் பத்திர முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
  • தேர்தல் பத்திர முறை தகவல் அறியும் உரிமையை மீறுகிறது - உச்ச நீதிமன்றம்
  • காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இத்தீர்ப்புக்கு வரவேறப்பு
'அரசியலமைப்புக்கு எதிரானது...' தேர்தல் பத்திரங்கள் ரத்து - உச்ச நீதிமன்றம் அதிரடி title=

Electoral Bonds, Supreme Court: தேர்தல் பத்திர முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. குறிப்பாக, ஐந்து நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வழங்கி உள்ளனர்.

அதில், "தேர்தல் பத்திர முறை என்பது சட்டவிரோதமானது எனக் கூறி அதனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திர நிதி விவரங்களை வழங்காமல் இருப்பதற்கு உரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை. 

தகவல் அறியும் சட்டத்தை மீறுகிறது

குறைந்தபட்ச கட்டுப்பாடுகள் என்பது திருப்திகரமாக இல்லை. கறுப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தை அடைய தேர்தல் பத்திரங்களை தவிர வேறு வழிகள் உள்ளன. தேர்தல் பத்திரங்கள் வாக்காளர் உரிமையை பறிக்கிறது" என்றார்.

மேலும் படிக்க | அர்விந்த் கேஜரிவாலுக்கு 6வது முறையாக சம்மன்... அடுத்தது என்ன!

தேர்தல் பத்திர முறை மக்களின் தகவல் அறியும் உரிமையை மீறும் வகையில் உள்ளது என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது,"இந்த தேர்தல் பத்திர முறையானது அரசியலமைப்பு பிரிவு 19 (1)(a) கீழ் உள்ள தகவல் அறியும் சட்டத்தை மீறும் வகையில் இருக்கிறது" என தீர்ப்பில் தெரிவித்துள்ளது. மேலும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் கொள்கைகளை சமரசம் செய்யும் வரம்பற்ற பெருநிறுவன நிதி குறித்த கவலையையும் உச்ச நீதிமன்றம் எழுப்பியிருக்கிறது.   

2018இல் அறிமுகம்

தேர்தல் பத்திரம் வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என வங்கிகளுக்கும், 15 நாட்களுக்குள் செல்லுபடியாகும் மற்றும் பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்களை அந்தந்த தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு திருப்பி அளிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பெரு நிறுவனங்கள் அளிக்கும் நிதி என்பது கருப்பு பணமாகும், ஏதாவது பலன்களை எதிர்பார்த்தே பெரு நிறுவனங்கள் நிதி அளிக்கின்றன என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. 

2018ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி அன்று தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த தேர்தல் பத்திர முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது, பண நன்கொடைகளை மாற்றுவதற்கும் அரசியல் நிதியளிப்பில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கும் ஒரு தீர்வாகக் கருதப்பட்டது. 

பாரத ஸ்டேட் வங்கி (SBI) தேர்தல் பத்திரங்களுக்காக நியமிக்கப்பட்ட வங்கியாகும். எஸ்பிஐ வங்கி, தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகள் பற்றிய விவரங்களை வழங்கவும், இந்தப் பங்களிப்புகளைப் பெறும் அரசியல் கட்சிகளை வெளியிடவும் கட்டாயப்படுத்தி உள்ளது. 

இந்த விவரங்களை மார்ச் 13ஆம் தேதிக்குள் தனது இணையதளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், அந்த விவரங்களை சமர்ப்பிக்குமாறு பாரத் ஸ்டேட் வங்கிக்கும் உத்தரவிட்டது. 

தீர்ப்பை நிறுத்தி வைக்க வாய்ப்பு

இந்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை வரவேற்பு தெரிவித்துள்ளன. இருப்பினும், தேர்தல் பத்திரங்களை கொண்டு வந்த பாஜகவின் தரப்பில் இந்த தீர்ப்பு குறித்து எவ்வித கருத்துகளும் தெரிவிக்கப்படவில்லை. 

மேலும், இதனை எதிர்த்து அமைச்சரவை அவசர சட்டம் கொண்டுவந்து, அதில் குடியரசு தலைவரின் அப்புதலை பெற்று இந்த தீர்ப்பை நிறுத்தி வைக்க பாஜகவுக்கு வாய்ப்பிருக்கிறது. டெல்லி அதிகாரம் சார்ந்த சமீபத்தில் நடந்த வழக்கில் கவர்னர் - முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோருக்கு இடையிலான வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஒரு சில வாரத்திலேயே குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று நிறுத்தி வைத்தது. 

அந்த வகையில், பாஜகவின் முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சரான ரவி சங்கர் பிரசாத் இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார். அதில் பாஜகவின் நிலைப்பாடு என்ன?, அவர்களின் அடுத்த கட்ட செயல்பாடு குறித்து தெரியவரும். மக்களவை தேர்தல் தேதி இன்னும் ஒரு சில நாள்களில் அறிவிக்கப்பட உள்ளது. தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்த பின்னர் இதனை நிறுத்திவைப்பது கடினம். 

மேலும் படிக்க | வன்முறை அன்றாட நிகழ்வாகிவிட்டது - ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News