வாஷிங்டன்: கருப்பு பணம் மற்றும் சட்ட விரோத பண பரிவர்த்தனைகளை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு பழைய 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும், அவற்றை வங்கிகளில் செலுத்தி புதிய ருபாய் நோட்டுகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து நேற்று முதல் புதிய ரூபாய் தாள்களை மக்கள் மாற்றி வருகின்றனர். இந்திய அரசின் மேற்கண்ட அதிரடி நடவடிக்கைக்கு சர்வதேச செலவாணி நிதியமான ஐ.எம்.எப் ஆதரவு தெரிவித்துள்ளது.
பணக்கட்டுப்பாடு மூலமாக ஊழலுக்கு எதிராக போராட இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு ஐ.எம்.எப் ஆதரவு தெரிவிப்பதாக அதன் செய்தி தொடர்பாளர் கெர்ரி ரைஸ் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற்ற பிறகு வியாழக்கிழமை முதல் வங்கிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பரவியுள்ள ஊழல் மற்றும் வரி ஏய்ப்பை தடுக்க இந்திய அரசு மேற்கொண்ட அதிர்ச்சியூட்டும் இந்த நடவடிக்கை ஊழலுக்கு எதிராக போராடவும் சட்ட விரோத பணப்புழக்கத்துக்கு எதிராகவும் இந்திய அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கையை கெர்ரி ரைஸ் ஆதரவு தெரிவிப்பதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.