பட்னா: சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் மெதுவாக உலகின் பல நாடுகளிலும் பரவத் தொடங்கியது. தாய்லாந்து, நேபாளம், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்த நோய் பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. மும்பை மற்றும் ஜெய்ப்பூருக்குப் பிறகு, பீகார் மாநிலத்தின் சாப்ராவில் கொரானா வைரஸ் இருக்கலாம் என சந்தேக நபர்கள் கண்டறியப்பட்டு உள்ளனர். அவரிடம் கொரோனா வைரஸ் போன்ற அறிகுறிகள் உள்ளன. இந்த பெண் நோயாளி பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு (பி.எம்.சி.எச்) அனுப்பப்பட்டுள்ளார். இருப்பினும், இதுவரை நாட்டில் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட வழக்கும் வரவில்லை என்பது நிம்மதியான விஷயம்.
சந்தேகத்திற்கிடமான பெண் நோயாளி சில நாட்களுக்கு முன்பு சீனாவிலிருந்து திரும்பினார். அந்தப் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் போன்ற அறிகுறி தோன்றிய சிறிது நேரத்திலேயே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பி.எம்.சி.எச். மருத்துவமனை கண்காணிப்பாளர் விமல் கரக் கூறுகையில், சமீபத்தில் சீனாவிலிருந்து திரும்பிய ஒரு பெண் கொரோனா வைரஸின் கலவையான அறிகுறிகளைக் கொண்டுள்ளதால் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அந்த பெண்ணின் இரத்த மாதிரி பரிசோதனைக்கு புனேவுக்கு அனுப்பப்படும், அதன் பின்னர் அந்த அறிக்கையின்படி அவருக்கு சிகிச்சை தொடங்கப்படும். இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான நபர்களை சோதனை செய்ய நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம் என்றார்.
Vimal Karak, Superintendent, Patna Medical College&Hospital: After she reaches PMCH, her blood sample will be sent to National Institute of Virology in Pune for test&then treatment will be provided as per reports. We are prepared for such a suspected case of #Coronavirus. #Bihar https://t.co/RtD1TF9INe pic.twitter.com/gdXC58oh1Q
— ANI (@ANI) January 27, 2020
ஜெய்ப்பூரில் சந்தேகத்திற்கிடமான நோயாளி:
முன்னதாக, சீனாவில் இருந்து ஜெய்ப்பூர்க்கு திரும்பி எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற அச்சத்தில் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஜெய்ப்பூரின் சவாய் மன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தனி வார்டில் வைக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் டாக்டர் ரகு சர்மா, மருத்துவரின் குடும்பத்தின் முழு உறுப்பினர்களையும் பரிசோதிக்க மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
மும்பையில் சந்தேக நபர்களிடம் சோதனை:
சமீபத்தில் மும்பையில், சந்தேகத்திற்கிடமான இரண்டு நோயாளிகள் சிஞ்ச்போக்லியில் உள்ள கஸ்தூர்பா மருத்துவமனையில் தனி வார்டுகளில் தங்க வைக்கப்பட்டனர். இந்த இருவரும் சமீபத்தில் சீனாவிலிருந்து திரும்பி வந்தனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ்?
நாட்டின் 7 விமான நிலையங்களில் கொரோனா வைரஸுக்கு எதிரான முன்னெச்சரிக்கையாக, 137 விமானங்களில் இருந்து 29,000 க்கும் மேற்பட்ட பயணிகளிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இதுவரை ஒரு வழக்கு கூட சாதகமாக கண்டறியப்படவில்லை. கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான இதுவரை யாரிடமும் பதிவாகவில்லை.
இதுவரை 80 பேர் பலி:
இந்த ஆபத்தான வைரஸால் சீனாவில் இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். சீனாவில் பரவும் கொடிய கொரோனா வைரஸ், இப்போது மிகவும் ஆபத்தான வடிவத்தை எடுத்து வருகிறது, மேலும் அதன் பரவல் தொடர்கிறது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.