முத்தலாக் முறை மசோதா திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இஸ்லாமியர்களின் முத்தலாக் முறை சட்ட மசோதா திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது! 

Last Updated : Aug 9, 2018, 07:05 PM IST
முத்தலாக் முறை மசோதா திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!  title=

இஸ்லாமியர்களின் முத்தலாக் முறை சட்ட மசோதா திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது! 

கடந்த முத்தலாக் முறைக்கு தடைக்கோரி கடந்த 2017 ஆம் ஆண்டு, ‘இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு உரிமை மசோதா’ பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 3 முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்வது இஸ்லாமிய மதத்தின் மரபாகும். இது, பெண்களுக்கு எதிரான அடக்குமுறையாக கருதப்படுவதாகக் கூறி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், முத்தலாக் முறை செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதைத்தொடர்ந்து, நாடாளுமன்றம் பச்சைக்கொடி காட்டிய முத்தலாக் மசோதாவில், திருத்தம் செய்ய வேண்டுமென மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இந்நிலையில், முத்தலாக் மசோதா திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதில், குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்குவது மாஜிஸ்டிரேட்டின் தனிப்பட்ட முடிவு என்ற அம்சமும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending News