ராகுல் காந்தியின் கார் தாக்கப்பட்டதா? விளக்கம் அளித்த காங்கிரஸ்

Rahul Gandhi's convoy Targeted: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கார் அடித்து நொறுக்கப்பட்டது. ராகுல் காந்தியின் பாதுகாப்பில் பெரும் குளறுபடி.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 31, 2024, 06:09 PM IST
ராகுல் காந்தியின் கார் தாக்கப்பட்டதா? விளக்கம் அளித்த காங்கிரஸ் title=

Rahul Gandhi News In Tamil: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என செய்திகள் பரவியதை அடுத்து, காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. 

"மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் ராகுல்காந்தியை சந்திக்க ஏராளமானோர் குவிந்தனர். இந்த கூட்டத்தில், ஒரு பெண் திடீரென ராகுல் காந்தியின் கார் முன் அவரை சந்திக்க வந்தார், இதனால் திடீரென பிரேக் போடப்பட்டது.

அப்போது பாதுகாப்பு வட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கயிற்றால் காரின் கண்ணாடி உடைந்தது.

மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக மக்கள் தலைவர் திரு ராகுல் காந்தி நீதி கேட்டுப் போராடி வருகிறார். பொதுமக்கள் அவருடன் உள்ளனர், பொதுமக்கள் அவருக்குப் பாதுகாப்பாக உள்ளனர்"

இவ்வாறு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தரப்பில் எக்ஸ் (X) தளத்தில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று (ஜனவரி 31, புதன்கிழமை) அவரது கார் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தின் போது வாகனத்தின் கண்ணாடி உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல் எறியப்பட்டதில் யாராவது காயமடைந்தார்களா? தற்போது இது குறித்து எந்த தகவலும் இல்லை.

பீகாரில் பாரத் ஜோடோ நீதி யாத்திரையின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கார் இன்று மதியம் அடித்து நொறுக்கப்பட்டது. ராகுல் காந்தியின் கான்வாயில் இருந்த காரின் பின்பக்க கண்ணாடி தாக்கி அடித்து நொறுக்கப்பட்டது என பி‌டி‌ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் 'பாரத் ஜோடோ நியாய யாத்ரா'வின் ஒரு பகுதியாக ராகுல் காந்தி பயணம் செய்த கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் புதன்கிழமை கற்களை வீசியதாக மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார்.

இந்த சம்பவத்தில் வாகனத்தின் பின்பக்க கண்ணாடி நொறுங்கியது. ஆனால் ராகுல் காந்திக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று தனது ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’யை பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் ரோட் ஷோவுடன் மீண்டும் தொடங்கினார். 

பாரத் ஜோடோ நியாய யாத்திரை பீகாரில் இருந்து மேற்கு வங்கத்தில் புதன்கிழமை மீண்டும் நுழைந்தது. மேற்கு வங்காளத்தில் முதல் கட்ட யாத்திரை திங்கள்கிழமை முடிவடைந்து, இஸ்லாம்பூரிலிருந்து பீகாருக்குள் நுழைந்தது. 

இந்த சம்பவம் குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், 'எங்கள் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளது, ஆனால் எங்கள் இந்திய நீதி யாத்திரையை யாரும் தடுக்க முடியாது. இந்த பேரத்தில், "எந்த அச்சுறுதலுக்கும் இந்தியா கூட்டணி தலைவணங்காது. இந்தியா கூட்டணியின் கூட்டமைப்பை வலுப்படுத்துவதும் தனது நோக்கம்" என்று மேற்கு வங்காள முதல்வர் கூறியதை நினைவூட்டுகிறேன்" என்று கூறினார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News