Uniform Civil Code: பிரான்சிலிருந்து இந்தியா வரை வலுக்கும் கோரிக்கை..!!!

எந்தவொரு நாட்டிலும் அடிப்படை சட்டங்கள் ஒரே மாதிரியாக  அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.  சட்டத்தின் முன் அனைவரும் சமம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 1, 2020, 01:23 PM IST
  • எந்தவொரு நாட்டிலும் அடிப்படை சட்டங்கள் ஒரே மாதிரியாக அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.
  • சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
  • சமூகத்தில் மதம், சாதி, வர்க்கம் ஆகியவற்றைத் தாண்டி நாட்டில் திருமணம், விவாகரத்து, வாரிசு மற்றும் தத்தெடுப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் ஒரே மாதிரியான சட்டம் இருக்க வேண்டும்.
Uniform Civil Code: பிரான்சிலிருந்து இந்தியா வரை வலுக்கும் கோரிக்கை..!!! title=

பொதுவான சிவில் சட்டம் அதாவது Uniform Civil Code -க்கு ஆதரவாக கோரிக்கை எழுப்பத் தொடங்கியுள்ளது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மைக்ரோன் இதற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அதை இந்தியாவில் கொண்டு வர வேண்டும் என்பது பாஜகவின்  (BJP) நெடு நாளைய நோக்கமாகும். தேர்தல் அறிக்கையில் கூட இதை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ளனர்

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS), நாட்டில் பொதுவான சிவில் சட்டம் குறித்த விவாதத்தைத் தொடங்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளது, மகாராஷ்டிராவில் (Maharashtra) ஆளும் சிவசேனா கட்சியும்  அதற்கு ஆதரவாக உள்ளது. முஸ்லிம்களின் முன்னணி அமைப்பான தனிநபர் சட்ட வாரியம் (personal law board) அதற்கு ஆதரவாக இல்லை.

எந்தவொரு நாட்டிலும் அடிப்படை சட்டங்கள் ஒரே மாதிரியாக  அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.  சட்டத்தின் முன் அனைவரும் சமம். சமூகத்தில் மதம், சாதி, வர்க்கம் ஆகியவற்றைத் தாண்டி நாட்டில் திருமணம், விவாகரத்து, வாரிசு மற்றும் தத்தெடுப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் ஒரே மாதிரியான சட்டம் இருக்க வேண்டும். மதத்தின் அடிப்படையில் தனி நீதிமன்றம் அல்லது தனி அமைப்பு இருக்கக் கூடாது.

நாட்டில் அரசியலமைப்பின் 44 வது பிரிவில் பொது சிவில் சட்டம் தொடர்பான விதிகள் உள்ளன. அதை அரசு செயல்படுத்த முடியும் என்று அது கூறுகிறது. மதத்தின் அடிப்படையில், இனத்தின் அடிப்ப்டையில் ஏற்படும் பாகுபாட்டை அகற்றுவதே இதன் நோக்கம்.

ALSO READ | இஸ்லாமோபோபியா அதிகரிப்பதற்கு யார் காரணம்?

1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பிறகு, புதிய நிர்வாக வழிமுறைகள் மற்றும் அமைப்புகளை உருவாக்க அரசியலமைப்புச் சபை உருவாக்கப்பட்டது. ஜூன் 1948 இல் நடைபெற்ற அதன் ஒரு கூட்டத்தில், அரசியலமைப்பு சபையின் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், நாட்டின் முதல் பிரதம மந்திரி பண்டிட் ஜவஹர்லால் நேருவிடம் (Pandit Jawaharlal Nehru), இந்து சமுதாயத்திலும் சிறு சிறுபான்மை இனத்தின் வளர்ச்சிக்காக, தனிப்பட்ட சட்டம் தேவை என்றார். ஆனால் பல மூத்த தலைவர்கள் இந்து சட்டங்களில் சீர்திருத்தங்களை எதிர்த்தனர். அதனால், பொது சிவில் சட்டம் குறித்து, கோட்பாடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது, கட்டாய விதிமுறையாக சேர்க்கப்படவில்லை.

1949 டிசம்பரில் இந்து சட்ட மசோதா விவாதிக்கப்பட்டபோது, ​​அதில் ஈடுபட்ட 28 பேர்களில் 23 பேர் அதை எதிர்த்தனர். 1951 ஆம் ஆண்டில், அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், அத்தகைய மசோதா நிறைவேற்றப்பட்டால், அவர் தனது தனது தனிப்பட்ட அதிகாரத்தை  பயன்படுத்துவாக கூறினார். பின்னர் அப்போதைய பிரதமர் நேரு இந்த இந்து சட்ட மசோதாவை மூன்று தனித்தனி சட்டங்களாகப் பிரித்து, விதிகள் தளர்த்தப்பட்டன.

அரசியலமைப்பின் 44 வது பிரிவில் இருந்து முஸ்லீம் தனிப்பட்ட சட்டத்தை நீக்க பல முறை முயன்ற முகமது இஸ்மாயில், மதச்சார்பற்ற நாட்டில் தனிப்பட்ட சட்டம் இருக்கக் கூடாது என்று கூறுகிறார். முஸ்லீம் சிந்தனையாளர்கள், இந்தியாவின் உருவம் பன்முகத்தன்மையில் ஒற்றுமை  என்பதாகும். பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில், எப்படி ஒரே சட்டம் கொண்டு வர முடியும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ALSO READ | அல்லாவை நிந்தித்தால் தலை துண்டிக்கப்படும் என முன்னாள் AMU மாணவரின் வெறிப்பேச்சு..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News