Article 370: அரசியல் சாசன அமர்வு விசாரணை ஆகஸ்ட் 22க்குள் முடிந்துவிடும்! தீர்ப்பு எப்போது?

Supreme Court Hearing: அரசியலமைப்பின் 370வது பிரிவை நீர்த்துப்போகச் செய்யும் மத்திய அரசின் 2019 முடிவுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்றும் தொடர்கிறது 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 17, 2023, 04:14 PM IST
  • அரசியல் சாசன பெஞ்ச் விசாரணையில் 370வது சட்டப்பிரிவு தொடர்பான மனுக்கள்
  • தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் விசாரணை
  • விசாரணை எத்தனை நாட்கள் நீடிக்கும்?
Article 370: அரசியல் சாசன அமர்வு விசாரணை ஆகஸ்ட் 22க்குள் முடிந்துவிடும்! தீர்ப்பு எப்போது? title=

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு வழிவகுத்த அரசியலமைப்பின் 370வது பிரிவை நீர்த்துப்போகச் செய்யும் மத்திய அரசின் 2019 முடிவுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்றும் தொடர்கிறது. இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் இன்று 7வது நாள் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுவரை, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், கோபால் சுப்ரமணியம், ஜாபர் அகமது ஷா ஆகியோர் தங்கள் வாதங்களை முடித்துள்ளனர். 'பிரிவு 370 ஒரு தற்காலிக ஏற்பாடு' என்று மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் டேவ் தெரிவித்தார்.

சட்டப்பிரிவு 370 ரத்து செய்த மத்திய அரசின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கான விசாரணை, ஆகஸ்ட் 2ம் தேதி முதல், உச்ச நீதிமன்றத்தில் நடைபெர்று வருகிறது. இன்று, இந்திய தலைமை நீதிபதி, மனுதாரர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார், விசாரணை ஆகஸ்ட் 17ம் தேதியான இன்றும் தொடர்கிறது.
 
370 விசாரணையும் உச்சநீதிமன்றமும்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசின் உத்தரவுக்கு எதிரான நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மனுக்களை தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. 

மேலும் படிக்க | கைவினைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் இந்திய அரசு! 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

இந்த வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன பெஞ்சில் தலைமை நீதிபதி தவிர, நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் உள்ளனர்.

விசாரணையின் போது, மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், 356வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது 'கார்டே பிளான்ச்' ( ‘carte blanche’ (complete) powers) அதிகாரங்களை இந்தியக் குடியரசுத் தலைவர் பயன்படுத்துவதில்லை என்று வாதிட்டார். மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, சட்டப்பிரிவு 370 என்பது ஒரு தற்காலிக ஏற்பாடாகும் என்றும், அது அதன் நோக்கத்தை நிறைவேற்றியதால் அதனால் திருத்த முடியாது என்று தெரிவித்தார்.

ஆகஸ்ட் 10 ஆம் தேதி விசாரணையின் போது, ஜம்மு காஷ்மீர் தனது இறையாண்மையை இந்தியாவிடம் ஒப்படைப்பது ‘முற்றிலும் முழுமையானது’ என்றும், 370வது சட்டப்பிரிவு நிரந்தரமானதா இல்லையா என்பதைக் கூறுவது ‘கடினமானது’ என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

மேலும் படிக்க | எதிர்கட்சிக் கூட்டணியில் ஆம் ஆத்மி இருக்காதா? இருக்க வைக்க முயற்சிக்கும் காங்கிரஸ்

மனுதாரர்களுக்கு அறிவுறுத்திய இந்திய தலைமை நீதிபதி
அனைத்து மனுதாரர்களின் வாதங்களும் ஆகஸ்ட் 22, 2023 செவ்வாய்க்கிழமைக்குள் முடிவடையும் வகையில், அனைவரும் தங்கள் நேரத்தைப் பிரித்துக் கொள்ளுமாறு மனுதாரர்களின் வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அறிவுறுத்தினார். அடுத்த வாரம் முதல் பிரதிவாதிகளின் வாதங்கள் தொடங்கும்.

விசாரணைக்கு பதிலளித்த மெகபூபா முஃப்தி 
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவருமான மெகபூபா முப்தி, “இந்தியாவின் கருத்து இன்று விசாரணையில் உள்ளது. இது நாட்டின் அரசியலமைப்பு, நீதித்துறை, ஜனநாயக அமைப்பு ஆகியவை இன்று விசாரணையில் உள்ளன என்று கூறினார்.

மேலும், உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வாதங்கள், இந்திய அரசியலமைப்பை சீர்குலைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை தவறாகப் பயன்படுத்திய ஆளும் கட்சியான பாஜகவை அம்பலப்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார். ஜம்மு காஷ்மீர் மக்களின் சிறப்பு அந்தஸ்தை பாஜக பறித்துவிட்டது என்று தெரிவித்த மெகஃபூபா முப்தி, இது எனக்கு ஒரு சட்டப் பிரச்சினை மட்டுமல்ல, உணர்ச்சிபூர்வமான பிரச்சினை என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | இனிமேல் சில ஆங்கில வார்த்தைகளை நீதிமன்றத்தில் பயன்படுத்தக்கூடாது: உச்ச நீதிமன்றம் தடை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News