டில்லி வன்முறை; உடனடி புகார்களை பதிவு செய்ய புதிய WhatsApp எண்...

வடகிழக்கு டில்லியில் 42 பேர் உயிரிழந்த கலவரத்தைத் தொடர்ந்து, உடனடி செய்தி பயன்பாட்டில் வெறுக்கத்தக்க செய்திகள் பரப்பப்படுவதைப் பற்றி மக்கள் புகார் அளிக்கக்கூடிய ஒரு வாட்ஸ்அப் எண்ணை வெளியிடுவது குறித்து டில்லி அரசு பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

Last Updated : Feb 29, 2020, 12:46 PM IST
டில்லி வன்முறை; உடனடி புகார்களை பதிவு செய்ய புதிய WhatsApp எண்... title=

வடகிழக்கு டில்லியில் 42 பேர் உயிரிழந்த கலவரத்தைத் தொடர்ந்து, உடனடி செய்தி பயன்பாட்டில் வெறுக்கத்தக்க செய்திகள் பரப்பப்படுவதைப் பற்றி மக்கள் புகார் அளிக்கக்கூடிய ஒரு வாட்ஸ்அப் எண்ணை வெளியிடுவது குறித்து டில்லி அரசு பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

சமூகங்களிடையே பகைமையை ஏற்படுத்தும் எந்தவொரு பொருளையும் அனுப்புவது குற்றம் என்பதால் இதுபோன்ற எந்தவொரு செய்தியையும் அனுப்ப வேண்டாம் என்று அரசாங்கம் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை சமூக ஊடகங்களில் வதந்திகளைக் கையாள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

"இதுபோன்ற செய்தி குறித்த தகவல்கள் யாருக்காவது கிடைக்கும் பட்சத்தில், அந்த செய்தியை அனுப்பிய நபரின் பெயர் மற்றும் எண்ணைக் கூறி அவர் உடனடியாக டெல்லி அரசுக்கு புகார் அளிக்க முடியும்" என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற புகார்களை பெறக்கூடிய வாட்ஸ்அப் எண்ணை வெளியிடுவது குறித்து டில்லி அரசாங்கம் பரிசீலித்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த புகார்களை ஒரு அதிகாரி திரையிடுவார், பின்னர் உண்மையான புகார்கள் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளுக்காக காவல்துறையினர் அங்கு அனுப்பபடுவர் என்றும் நம்பக்கூடிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, வடகிழக்கு டில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய வன்முறை 42 பேரைக் கொன்றது, டில்லி காவல்துறை இறுதியாக நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை மேலும் நான்கு இறப்புகளை உறுதிப்படுத்திய நிலையில் டெல்லி வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 42-ஆக உயர்ந்தது, வியாழக்கிழமை வரை எண்ணிக்கை 38-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. அவற்றில் - ஒரு புலனாய்வு பணியக ஜவான் மற்றும் டெல்லி காவல்துறை தலைமை கான்ஸ்டபிள் உயிர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

GTP மருத்துவமனையின் CMO தகவல்படி, இந்த மருத்துவமனையில் 239 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதிய சேர்க்கை உட்பட, அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் தற்போதைய எண்ணிக்கை 45 ஆக உள்ளது, அவர்களில் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) உள்ளனர்.

வடகிழக்கு டில்லியின் சில கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை கடைகள் திறக்கப்பட்டன.

டில்லி காவல்துறையினர் வடகிழக்கு டில்லி கலவர விசாரணையை குற்றப்பிரிவுக்கு மாற்றியுள்ளனர், மேலும் இந்த வழக்குகளை இப்போது இரண்டு சிறப்பு புலனாய்வு குழுக்கள் (SIT) விசாரிக்கும்.

வடகிழக்கு டில்லி வகுப்புவாத வன்முறை தொடர்பாக இதுவரை மொத்தம் 123 FIR பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் சுமார் 623 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News