இன்று உலக ஹீமோபிலியா தினம். ஹீமோபிலியா என்பது இரத்தத்துடன் தொடர்புடைய ஒரு மரபணு பிரச்சனையாகும். இந்த நோய் உள்ள நபருக்கு, லேசான காயம் ஏற்பட்டாலும் ரத்தம் நிற்காமல் இருக்கும். பல சமயங்களில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழப்புக்கு காரணமாகிறது.இது ரத்த போக்கு நோய் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த நோய் உடலில் இருக்கும் சில புரதங்களின் குறைபாடு காரணமாக ஏற்படுகிறது. இந்நிலையில், இந்த ஆபத்தான நோயின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சையைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். ஹீமோபிலியா நோயின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை பற்றி இன்று அறிந்து கொள்ளலாம்.
ஹீமோபிலியா என்னும் ஆபத்தான பிரச்சனை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உலக ஹீமோபிலியா கூட்டமைப்பை நிறுவிய ஃபிராங்க் கேன்பெல்லின் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 17ஆம் தேதி உலக ஹீமோபிலியா தினம் அனுசரிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | Heart Health: இதய நோய்களை மருந்து இல்லாமல் குணப்படுத்த செய்ய வேண்டியவை என்ன
ஹீமோபிலியா என்றால் என்ன?
நமக்கு காயம் ஏற்படும் போது, காயத்திலிருந்து ரத்தம் வழியத் தொடங்குகிறது. இப்படி ஓடும் ரத்தத்தை நிறுத்த நம் உடலில் தானியங்கி அமைப்பு உள்ளது. நமது உடல் காயத்தைச்சுற்றி வழியும் ரத்தத்தை உறைய செய்து, இரத்தப்போக்கு நிறுத்த வகை செய்கிறது. இருப்பினும், ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இது நடப்பதில்லை. அத்தகைய நபருக்கு காயம் ஏற்பட்டால், இரத்த உறைவு அவர்களின் இரத்த போக்கு நிற்காமல், அதிக ரத்த போக்கினால், உயிர் இழக்கும் அபாயம் ஏற்படுகிறது.
ஹீமோபிலியா என்பது த்ரோம்போபிளாஸ்டின் குறைபாடு அல்லது இரத்தம் உறைவதை தடுக்கும் ஒரு மரபணு நோயாகும். உடலில் இரத்த போக்கு ஏற்படும் போது, இரத்தத்துடன் இணைந்த செல்கள் இரத்த உறைவை ஏற்படுத்துவதம் மூலம் இரத்த ஓட்டத்தைத் தடுக்கின்றன, ஆனால் இந்த கிளாட்டிங் பேக்டர் வேலை செய்யாத போது அது ஹீமோபிலியாவை ஏற்படுத்தும். பெரும்பாலானோருக்கு இந்த பிரச்சனை பெற்றோரிடம் இருந்து வருகிறது. ஆனால் சில சமயங்களில் நோயாளியின் மரபணுக்களில் கற்பனை செய்ய முடியாத சில மாற்றங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | Health Alert! கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க காரணமாகும் ‘5’ பழக்கங்கள்
ஹீமோபிலியாவின் அறிகுறிகள்
மூக்கில் இரத்தக்கசிவு
மூட்டு வலி பிரச்சனை
கழுத்தில் விறைப்பு
தோல் எளிதாக உரித்தல்
தலைவலி
குமட்டல் உணர்வு
ஈறுகள் மற்றும் பற்களில் இரத்தப்போக்கு
இது தவிர, மலத்தில் இருந்து ரத்தம் வருதல், கருநீலக் காயங்கள் தோன்றுதல், உடல் காயமின்றி நீல நிறமாக மாறுதல், எரிச்சல் போன்ற உணர்வு. இந்த மற்ற அறிகுறிகள் தோன்றினாலும், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
எச்சரிக்கை நடவடிக்கைகள்
இதுபோன்ற சில அறிகுறிகளை நீங்கள் கண்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது தவிர தினமும் உடற்பயிற்சி, யோகா செய்யவும். தசைகள் மற்றும் வலுவான எலும்புகளுக்கு கால்சியத்தை உட்கொள்ளுங்கள். எனினும் அதிகப்படியான உடல் செயல்பாடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளை அவ்வப்போது பரிசோதிக்கவும்.
மேலும் படிக்க | இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’; இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR