கழுத்தில் இந்த அறிகுறி இருக்கா? நீரிழிவு நோய் இருக்க வாய்ப்பிருக்கு!!

Symptoms of Diabetes: கழுத்து பகுதியில் இருக்கும் கருப்பு திட்டு நீரிழிவு நோய்க்கும் ஒரு நேரடி அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. இது போன்ற கருந்திட்டுகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 19, 2024, 12:57 PM IST
  • சிலரின் கழுத்தில் எப்போதும் கருப்பு திட்டுகள் இருக்கும்.
  • இந்த அறிகுறியை பலர் புறக்கணித்து விடுகிறார்கள்.
  • இது பெரிய தவறு.
கழுத்தில் இந்த அறிகுறி இருக்கா? நீரிழிவு நோய் இருக்க வாய்ப்பிருக்கு!! title=

Symptoms of Diabetes: நீரிழிவு நோய் இன்றைய காலகட்டத்தில் மக்களிடையே பரவலாக காணப்படும் நோயாக உள்ளது. குறிப்பாக இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.  இந்தியா நீரிழிவு நோயாளிகளின் தலைநகரம் என குறிப்பிடப்படும் அளவிற்கு இங்கு சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. 

நீரிழிவு நோய் 

ஒருமுறை ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. எனினும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை மூலம் இதை கட்டுக்குள் வைக்கலாம். இதை தொடக்கத்திலேயே கண்டறிந்தால், நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது எளிதாகி விடும். 

உடலில் இரத்த சர்க்கரை அளவு (Blood Sugar Level) அதிகமானால், உடனடியாக நம் உடல் சில அறிகுறிகளை காண்பிக்கும். இவற்றை பற்றிய புரிதல் இருந்தால், இந்த அறிகுறிகளை கண்டவுடன், நாம் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுத்து, சர்க்கரை அளவு அதிகமாவதை தவிர்க்கலாம். 

கழுத்தில் தெரியும் நீரிழிவு நோயின் அறிகுறி

சிலரின் கழுத்தில் எப்போதும் கருப்பு திட்டுகள் இருக்கும். இந்த அறிகுறியை பலர் புறக்கணித்து விடுகிறார்கள். இது பெரிய தவறு. இந்த அறிகுறி அழுக்கு அல்லது தூய்மையுடன் தொடர்புடையது அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சரியாக தேய்த்து குளிக்காவிட்டால் மட்டும் கழுத்துப் பகுதியில் கருப்பு திட்டுகள் வருவதில்லை. இதற்கு வேறு சில தீவிர காரணங்களும் இருக்கின்றன.

கழுத்து பகுதி கருப்பாக இருப்பது, உடலில் ஏற்படும் பிரச்சனைகளை குறிக்கிறது. கருப்பு கழுத்து நோய்களின் அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. சரியான நேரத்தில் சிகிச்சையைத் தொடங்க, அவற்றை சரியாகப் புரிந்துகொள்வது அவசியம். கழுத்து பகுதியில் இருக்கும் கருப்பு திட்டு நீரிழிவு நோய்க்கும் ஒரு நேரடி அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. இது போன்ற கருந்திட்டுகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. 

இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் என்றால் என்ன?

உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து வரும்போது இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் ஏற்படும். இதன் காரணமாக கழுத்து கருப்பாக மாறத் தொடங்குகிறது, இது நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாக கருதப்படுகின்றது. மருத்துவ மொழியில் இது அகாந்தோசிஸ் நிக்ரிகன்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த அறிகுறி நீரிழிவு நோயைக் கண்டறிய மிகவும் பொதுவான மற்றும் எளிதான வழி என நிபுணர்கள் கருதுகிறார்கள். இது குழந்தை பருவத்திலிருந்தே குழந்தைகளிலும் தோன்றத் தொடங்கும் அறிகுறியாகும். ஆகையால் கழுத்தில் இப்படிப்பட்ட அறிகுறி தென்பட்டால், உடனடியாக மருத்துவரை கண்டு ஆலோசிப்பது நல்லது. 

நீரிழிவு நோயின் பிற முக்கிய அறிகுறிகள் என்ன?

- அவ்வப்போது பசி எடுப்பது.
- வாய் உலர்ந்து போவது.
- தோலில் அரிப்பு.
- கண் பார்வையில் பாதிப்பு
- அடிக்கடி சிறுநீர் கழிப்பது

மேலும் படிக்க | கிட்னி - லிவரை காலி செய்யும் வலி நிவாரணிகள்... எச்சரிக்கும் மருத்துவர்கள்

சர்க்கரை நோய் பரிசோதனை செய்வது எப்படி?

நீரிழிவு நோயைக் கண்டறிய குளுக்கோஸ் ரெசிஸ்டன்ஸ் சோதனை மற்றும் HbA1c ஆகியவை செய்யப்படுகின்றன. Hba1c சோதனை முடிவுகள் விரைவாக கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சர்க்கரையை கட்டுப்படுத்த சில பொதுவான குறிப்புகள்:

- சரிவிகித, சமச்சீர் உணவை உட்கொள்ள வேண்டும்.
- தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிக அவசியம்.
- போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்
- மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்.
- பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

கழுத்துப்பகுதியில் கருந்திட்டுகள் ஏற்பட பிற காரணங்களும் உள்ளன. இதை இரைப்பை அழற்சியின் அறிகுறியாகவும் எடுத்துக்கொள்ளலாம். எடை அதிகரிப்பு, உடல் பருமன், ஹைப்போ தைராய்டிசம், பிசிஓஎஸ் (PCOS) ஆகிய பிரச்சனைகள் இருந்தாலும், கழுத்து கருப்பாக மாறத் தொடங்குகிறது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உஷார்! புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள் இவைதான்.. அலட்சியம் வேண்டாம்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News