சப்ஜா விதை செடி
சப்ஜா விதைகளை கொடுக்கும் செடி துளசி இனத்துடன் சேர்ந்தது. இதனை திருநீற்றுப்பச்சை எனவும் அழைப்பார்கள். இந்த செடியில் இருந்து தான் சப்ஜா விதைகள் கிடைக்கின்றன. இயல்பாகவே நறுமணம் கொண்டிருக்கும் சப்ஜா செடியில், இதன் விதையைக் கொண்டு நறுமணம் மிக்க எண்ணெயும் தயாரிக்கப்படுகிறது. இதன் இலையை பேசில் என அழைப்பார்கள். மூலிகை மருத்துத்தில் மிகவும் பிரபலம்.
சப்ஜா இலை பயன்கள்
உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும் சக்தி சப்ஜா இலைக்கு இருக்கிறது. இதனால் மூக்கடைப்பு, தலைவலி, தலைபாரம் இருப்பவர்கள் சப்ஜா இலையை சாப்பிட்டால் நிவாரணம் பெறலாம். தொந்தரவுகள் இருக்கும்போது ஒரு கைபிடி அளவு இலையை, 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இதன் மூலம் உடனடியாக மூக்கடைப்பு, தலைபாரம் நீங்கும். இது பூச்சிகளை கொல்லும் சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது படர்தாமரை தொந்தரவால் அவதிப்படுகிறவர்கள், இதனை அரைத்து சருமத்தில் பூசி வரலாம். எல்லாவிதமான தோல் நோய்களுக்கும், இந்த இலைச்சாறு ஏற்றது.
மேலும் படிக்க | பூண்டுக்குள் பூகம்பம்: பூண்டு அதிகமானால் ஆபத்துங்க.... ஜாகிரதை!!
சளி காது வலியை போக்கும்
சாறை உடலில் பூசிக்கொண்டால், பூச்சிகள் எதுவும் நெருங்காது. விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டால் முதலுதவியாக கடிபட்ட பாகத்தில் இந்த சாறு தேய்க்கப்படுகிறது. சிலருக்கு காய்ச்சல் இருக்கும்போது வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும். இதற்கு ஒரு கைபிடி அளவு இலையை எடுத்து ஒரு லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தொடர்ந்து பருகிவரவேண்டும். காதுவலி மற்றும் காது நோய்களுக்கும் இந்த இலைச்சாறு நிவாரணியாக விளங்குகிறது.
முகப்பருக்களை போக்கும்
டீன்ஏஜில் பெரும்பாலான பெண்கள் முகப்பருவால் அவதிப்படு கிறார்கள். அவர்கள் இந்த பச்சிலை சாற்றை முகப்பருக்கள் மீது தேய்த்துவந்தால் பரு நீங்கி இயல்பாகும். தழும்புகளும் மறையும். சப்ஜா விதைகளிலும் மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அவை பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும். இந்த விதைகளை நீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும். இது நீரை உறிஞ்சி வழுவழுப்பாக மாறும் இயல்புகொண்டது.
குடல் புண்களுக்கு நிவாரணம்
ஒரு தேக்கரண்டி விதைகள் நீரில் ஊறிய பின்பு பல மடங்காக அதிகரிக்கும். இந்த விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். எடையை குறைக்க விரும்புகிறவர்களும் தினம் ஒரு தேக்கரண்டி விதையை ஊறவைத்து சாப்பிடலாம். ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை இது ஆற்றும். நெஞ்செரிச்சலையும் போக்கும்.
மலச்சிக்கல் இருக்காது
மலச்சிக்கலை போக்குவதற்கு இது சிறந்த மருந்து. மலச்சிக்கலால் அவதிப்படும் முதியோர்கள் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை சூடான பாலில் கலந்து குடிக்கவேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கும் இது நிவாரணமாகும். சிறுநீர் பாதையில் ஏற்படும் புண், நீர் எரிச்சல் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலுக்கும் இது நல்ல மருந்து. இது உடல் சூட்டை குறைத்து, உடலை சீரான சீதோஷ்ண நிலைக்கு கொண்டுவரும் இயல்புகொண்டது. அதனால் இதை கோடைகாலத்தில் மட்டுமின்றி, உடல் சூட்டால் அவதிப்படும் காலகட்டத்திலும் பயன்படுத்தலாம். கோடை காலத்தில் நன்னாரி சர்பத்தில் இதை கலந்து சாப்பிடுவது நல்லது. இந்த சப்ஜா விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
மேலும் படிக்க | தொப்பை வெண்ணெய் போல் கரைய... ‘இந்த’ எளிய பயிற்சிகளை தினமும் செய்யவும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ