எடை இழப்பு டிப்ஸ்: வெறும் வயிற்றில் பெருங்காயம் + தேன் செய்யும் மேஜிக்

வயிற்றுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும் பெருங்காயம், தேனுடன் கூட்டு சேர்ந்தால் வயிற்றுப் பிரச்சனைகளை சீர்படுத்தும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 14, 2022, 08:46 AM IST
  • வெறும் வயிற்றில் பெருங்காயமும் தேனும் செய்யும் மேஜிக்
  • கொழுப்பை கரைக்கும் தேன்
  • வயிற்றுப் பொருமலை குணப்படுத்தும் பெருங்காயம்
எடை இழப்பு டிப்ஸ்: வெறும் வயிற்றில் பெருங்காயம் + தேன் செய்யும் மேஜிக் title=

தினமும் காலையில் வெறும் வயிற்றில் பெருங்காயம் மற்றும் தேன் உட்கொள்வது கொழுப்பை ஜீரணிக்க உதவுகிறது. வயிற்றுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும் பெருங்காயம், தேனுடன் கூட்டு சேர்ந்தால் ஜாடிக்கேற்ற மூடியாக செயல்பட்டு வயிற்றை சீர்படுத்தும்.

பல மருத்துவ குணங்கள் நிறைந்த பெருங்காயம் ஒரு ஆன்டாக்சிட். ஆனால் இது, வயிற்றை குளிர்விக்கவும் அமைதிப்படுத்தவும் தேனுடன் இணைந்து உதவுகிறது. 

இவை இரண்டுமே எடை இழப்புக்கு மிகவும் திறம்பட செயல்படும். வளர்சிதை மாற்றத்தை சரிசெய்யும் பெருங்காயமும், தேனில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்களும் உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகின்றன.

மேலும் படிக்க | பெண்களின் அந்தரங்க உறுப்பை பராமரிக்கும் ஆப்பிள் சிடர் வினிகர்

இது தவிர, இவை இரண்டும் பல வழிகளில் வயிற்றுக்கு வேலை செய்யும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. எனவே, காலையில் வெறும் வயிற்றில் பெருங்காயத்துடன் தேனை கலந்து உண்பதால் பல நன்மைகள் உண்டு.

பெருங்காயத்துடன் கூட்டணி வைத்து தேன் நமக்கு கொடுக்கும் நன்மைகளில் முதலிடத்தை பிடிக்கும் ஐந்து விஷயங்கள் இவை... பல வயிற்று நோய்களிலிருந்து உங்களைக் காப்பாற்றும். எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

கொழுப்பை எரிக்க உதவுகிறது

உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் காலையில் வெறும் வயிற்றில் பெருங்காயம் மற்றும் தேனை உட்கொண்டால் கொழுப்பை ஜீரணிக்க உதவும். உண்மையில், பெருங்காயத்தின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.

health
 

வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும் தேனை, பெருங்காயத்துடன் சேர்த்து  பருகினால், கொழுப்பை எளிதில் கரைக்க உதவுகிறது.வயிற்றின் பல்வேறு பகுதிகளில் படிந்திருக்கும் கொழுப்பைக் குறைக்கவும் இந்த முறை பயனுள்ளதாக இருக்கும்.

வீக்கத்தைத் தடுக்கிறது
காலையில் ஒரு ஸ்பூன் பெருங்காயத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று உப்புசம் குறையும். உண்மையில், இது வீக்கத்தைக் குறைக்கும் மிகவும் பயனுள்ள வழியாகும்.

பெருங்காயம் மற்றும் தேன் இரண்டிலும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன, அவை வீக்கத்தைக் குறைக்கின்றன  

அஜீரண பிரச்சனை 
கோடைக்காலத்தில் பலருக்கு செரிமானத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இவை இரண்டும் அஜீரண பிரச்சனையை நீக்குவதற்கு உதவியாக இருக்கும்.

ஆன்டாக்சிட் போல செயல்படுவதுடன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் கொண்டுள்ள பெருங்காயம், உணவை வேகமாக செரிமானம் செய்ய உதவுகிறது. 

health

இந்தக் கலவையானது, வயிற்றில் அதிகப்படியான அமிலத்தின் உற்பத்தி ஏற்படாமல் தடுக்கிறது. எனவே, தேன் வயிற்றின் pH அளவை சரிசெய்கிறது. இதனால் அஜீரண பிரச்சனைக குறைகிறது.

அசிடிட்டிக்கு அருமருந்து
அசிடிட்டி இருப்பவர்கள் ஒரு ஸ்பூன் பெருங்காயத்தை லேசாக சூடு செய்துக் கொண்டு, அதில் ஒரு ஸ்பூன் தேனில் கலக்கவும். இதை சாப்பிட்டு வெந்நீர் அருந்தவும். சிறிது நேரத்தில் அசிடிட்டி பிரச்சனை சரியாகிவிடும். இந்த பழக்கத்தை தொடர்ந்து பின்பற்றினால், அசிடிட்டி பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

வயிற்று வலிக்கு அருமருந்து
வயிற்று வழிக்கு பாட்டி வைத்தியம் இது.  பெருங்காயத்தை லேசாக சூடாக்கி, பின்னர் தேன் கலந்து சாப்பிடவும். அதன் பிறகு சிறிது தண்ணீர் குடித்துவிட்டு நேராக படுத்துக் கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து வயிற்று வலி, சொல்லாமல் கொள்ளாமல் ஓடுவிடும். நீங்கள் போயே போச்சு வயிற்றுவலி என்று நிம்மதியாக இருக்கலாம்.

மேலும் படிக்க | அமிர்தவல்லி கல்லீரலை சேதப்படுத்துமா? ஆயுஷ் அமைச்சகத்தின் விளக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News