உடல் எடையைக் குறைக்க காலை உணவு: தவறான உணவுப் பழக்கவழக்கங்களாலும், தவறான வாழ்க்கை முறையாலும் தற்போது மக்கள் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். சிலர் உடற்பயிற்சி செய்வது பற்றியெல்லாம் யோசிப்பதே இல்லை. சரியான பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதில்லை. சிலர் அடிக்கடி அதிகமாக சாப்பிட்டுவிட்டு, உடல் எடை அதிகரிக்கும் போது, காலை உணவைத் தவிர்த்து, ஜிம்மில் மணிக்கணக்கில் நேரம் செலவிடுவார்கள். எந்த வித பழக்கமானாலும் அதை தொடர்ந்து செய்தால்தான் அதனால் நல்ல விளைவு கிடைக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
காலை உணவு
ஒருவரது முழுமையான ஆரோக்கியத்துக்கு காலை உணவு மிக முக்கியமான உணவாகும். ஆனால், உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் பலர் காலை உனவையே முதலில் குறைக்கிறார்கள். ஆனால், காலை உணவைத் தவிர்த்தால் எடை குறையாது என்பது பலருக்குத் தெரிவதில்லை. இதற்கு பதிலாக, காலை உணவை தவிர்ப்பதால் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.
காலையில் சத்தான காலை உணவை உட்கொள்வது மிக அவசியம் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால் நீங்கள் தவறான உணவு மற்றும் அதிகப்படியான உணவைத் தவிர்க்கலாம். சில சரியான காலை உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்வதன் மூலம், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உதவி கிடைக்கும். உடல் எடையை குறைக்க உதவுவதோடு, நாள் முழுவதும் உங்களை ஆற்றலுடன் இருக்கச்செய்யும் சில காலை உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடல் எடையை குறைக்க உதவும் காலை உணவுகள்:
முட்டை - காலை உணவில் முட்டை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க சிறந்த வழியாக இருக்கும். இதில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இதன் காரணமாக, நீங்கள் நீண்ட நேரம் நிறைவாக உணர்கிறீர்கள். உங்கள் வயிறு நிரம்பினால், அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். வேண்டுமானால் முட்டையில் ஆம்லெட் பாயில் அல்லது புர்ஜி செய்து சாப்பிடலாம். ஆம்லெட் அல்லது புர்ஜி செய்யும் போது அதிக எண்ணெய் பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பனீர்- காலை உணவில் சீஸ் சேர்த்துக்கொள்வதும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புரோட்டீன் கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இதில் உள்ளன. பனீரை பல வழிகளில் உங்கள் காலை உணவில் சேர்க்கலாம். சாண்ட்விச், புர்ஜி ரொட்டியுடன் இதை சாப்பிடலாம். இது தவிர, காலை உணவில் உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து பச்சை பனீரையும் சாப்பிடலாம். இது உடல் எடையை குறைக்கவும், உடலில் ஆற்றல் சீராக இருக்கவும் உதவும்.
ஓட்ஸ்- காலை உணவில் ஓட்ஸ் சாப்பிடுவதும் நன்மை பயக்கும். இதில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. காலை உணவில் இதைச் சாப்பிட்டால் வயிறு நீண்ட நேரம் நிறைவாக இருப்பதோடு, செரிமானமும் நன்றாக இருக்கும். ஓட்ஸ் கஞ்சி செய்து, அதிக காய்கறிகளையும் சேர்க்கலாம். இதனால் ஓட்ஸ் மூலம் கிடைக்கும் சத்து இன்னும் அதிகரிக்கும்.
இட்லி / தோசை - நமது தென்னிந்திய பாரம்பரிய காலை உனவுகளான இட்லி, தோசை ஆகிட்யவை மிகச்சிறந்த காலை உணவுகளாக உலக அளவில் பேசப்படுகின்றன. சாம்பார் அல்லது சட்னியுடன் இவற்றை சாப்பிடுவது சுவையான மற்றும் நல்ல தேர்வாக இருக்கும். இதில் புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் தாதுக்கள் ஏராளமாக உள்ளன. இட்லியில் கலோரிகள் மிகவும் குறைவு. மேலும் இது எண்ணெயில் சமைக்கப்படாமல், நீராவியில் தயாரிக்கப்படுகிறது. ஆகையால், இது எளிதில் ஜீரணமாகும். அதை சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை பெறலாம். சாம்பாரில் பல காய்கறிகளைப் போட்டு செய்தால், அவற்றின் மூலமும் அதிக சத்துக்கள் கிடைக்கும்.
அவல் - அவல் மிகவும் லேசான உணவாகும். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமானால், தினமும் காலையில் அவலை உட்கொள்ளலாம். அவல் உப்புமா செய்து சாப்பிடலாம், அல்லது அவலை பாலில் ஊற வைத்தும் உட்கொள்ளலாம். இதில் சுமார் 76.9% கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் தோராயமாக 23% கொழுப்புகள் உள்ளன. இந்த கலவை காரணமாக இது கார்போஹைட்ரேட்டுகளின் சிறந்த ஆதாரமாக உள்ளது. இது உடலில் கொழுப்பு சேமிக்கப்படுவதைத் தடுக்கிறது. நீண்ட நேரம் நிறைவாக உணரவும், ஒரு நீண்ட பிஸியான நாளுக்குத் தேவையான ஆற்றலைப் பெறவும் அவல் நல்ல தேர்வாக இருக்கும்.
மேலும் படிக்க | இந்த அறிகுறிகள் எல்லாம் உயிருக்கே ஆபத்து..! தவறுதலாக கூட புறக்கணிக்காதீர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ