உடல் எடை உடனே குறையணுமா? இந்த மேஜிக் பானம் உங்களுக்கு உதவும்

Weight Loss: வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பு சேரத் தொடங்கும் போது, ​​​​உடலின் ஒட்டுமொத்த வடிவம் மோசமடைகிறது. இதன் காரணமாக பலர் பல முறை சங்கடங்களையும் எதிர்கொள்கின்றனர்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 9, 2022, 07:18 PM IST
  • இளநீர் பல ஊட்டச்சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு மிகச்சிறந்த பானமாகும்.
  • கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களிலும் இது கிடைக்கிறது.
  • இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையை பெருமளவு குறைக்கலாம்.
உடல் எடை உடனே குறையணுமா? இந்த மேஜிக் பானம் உங்களுக்கு உதவும் title=

எடை இழப்புக்கு இளநீர்: இன்றைய அதிவேக காலத்தில் உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. அனைவரும் தங்களது உடல் கட்டுக்கோப்பாகவும், ஸ்லிம்மாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். பருமனான உடல் வாகை யாரும் விரும்புவதில்லை. உடல் பருமன் பல வித உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கிறது. அதிக உடல் எடை காரணமாக அதிக கொழுப்பு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். உடல் பருமனை குறைக்க பல வித பழக்க வழக்கங்களை நாம் மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, நாம் உண்ணும் உணவில் அதிக கட்டுப்பாடு தேவை. எதை உட்கொள்ள வெண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்ற புரிதல் நம்மிடம் இருக்க வேண்டும். 

வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பு சேரத் தொடங்கும் போது, ​​​​உடலின் ஒட்டுமொத்த வடிவம் மோசமடைகிறது. இதன் காரணமாக பலர் பல முறை சங்கடங்களையும் எதிர்கொள்கின்றனர், நம்பிக்கையை இழக்கின்றனர். எனினும், சில இயற்கையான எளிய வழிகளில் நாம் நம் உடல் எடையை குறைத்து ஃபிட்டாக இருக்கலாம். அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்தெ பதிவில் காணலாம். 

உடல் எடையை குறைக்க இந்த இயற்கை பானத்தை குடியுங்கள்

இளநீர் பல ஊட்டச்சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு மிகச்சிறந்த பானமாகும். இது நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் ஒரு இயற்கை பானம். கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களிலும் இது கிடைக்கிறது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையை பெருமளவு குறைக்கலாம்.

மேலும் படிக்க | மழைக்காலங்களில் இந்த உணவுகளை எல்லாம் கட்டாயம் சாப்பிடாதீங்க 

இளநீரில் காணப்படும் சத்துக்கள்

பிரபல உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ், இளநீர் குடிப்பதை வழக்கமாக்கினால், அது உடலுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் இயற்கை என்சைம்களை வழங்கும் என்று கூறியுள்ளார். இதனால் உடல் நீரேற்றமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

இளநீர் கொண்டு உடல் எடையை குறைப்பது எப்படி

இளநீரில் இயற்கையான சர்க்கரை மற்றும் மிகக் குறைவான கலோரிகள் உள்ளன. கார்போஹைட்ரேட்டுகளும் இதில் குறைவான அளவில் காணப்படுகின்றன. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. ஒரு முறை இளநீர் குடித்தால், நீண்ட நேரம் நிரம்பிய உணர்வு இருக்கும். இதனால், தேவை இல்லாத ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கலாம். அத்தகைய சூழ்நிலையில், படிப்படியாக உங்கள் எடை குறைகிறது. பழச்சாறுகளை விட இளநீர் அதிக நன்மை பயக்கும். ஏனெனில் அதில் அதிக தாதுக்கள் உள்ளன.

இளநீரை எப்போது குடிக்க வேண்டும்?

இளநீரை எப்போது குடித்தாலும், அது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் இந்த இயற்கை பானத்தை காலையில் குடிப்பது சிறந்தது. அப்படி குடிப்பதால், அதன் விளைவு நாள் முழுவதும் தெரியும். காலையில் இளநீர் குடித்தால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள். 

மேலும் படிக்க | எலும்புகளை வலுப்படுத்தும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த ‘சில’ உணவுகள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News