India vs Australia Perth Test: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை (Border Gavaskar Trophy) நாளை மறுதினம் (நவ. 22) தொடங்க உள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இப்போட்டியை காலை 7.50 மணி முதல் நேரலையில் காணலாம்.
இந்திய அணிக்கும் சரி, ஆஸ்திரேலிய அணிக்கும் (Team Australia) சரி இந்த டெஸ்ட் தொடர் மிக முக்கியமானதாகும். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு (ICC World Test Championship Final 2024) தகுதிபெறுவதற்கு இரு அணிகளும் இந்த தொடரில் பெரும்பான்மையான போட்டிகளை வென்றாக வேண்டும். அதிலும் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை முழுவதுமாக இழந்து பெரும் பின்னடைவில் உள்ளது. தற்போது சொந்த மண்ணில் விளையாடுவதால் ஆஸ்திரேலியா தன்னம்பிக்கையுடன் இந்த தொடரை எதிர்கொள்கிறது.
அந்த வகையில், ஏற்கெனவே அழுத்தத்தில் இருக்கும் இந்திய அணிக்கு (Team India) இந்த மூன்று ஆஸ்திரேலிய வீரர்கள் கூடுதல் அழுத்தத்தை தருவார்கள் எனலாம். ஆஸ்திரேலியாவின் வியூகத்தை உடைக்க இந்த மூன்று ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இந்திய அணி கொஞ்சம் கூட இடமளிக்கவே கூடாது. அந்த மூன்று வீரர்கள் குறித்து பார்ப்பதற்கு முன் இரு அணிகளின் உத்தேச பிளேயிங் லெவனை இங்கு பார்க்கலாம்.
IND vs AUS: உத்தேச பிளேயிங் லெவன்
ஆஸ்திரேலியே பிளேயிங் லெவன் (கணிப்பு): நாதன் மெக்ஸ்வீனி, உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், நாதன் லயான், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க்
இந்திய அணி பிளேயிங் லெவன் (கணிப்பு): யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரேல், நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), முகமது சிராஜ்
டிராவிஸ் ஹெட்
கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலேயே இந்திய அணியிடம் இருந்து கோப்பையை பறித்துச் சென்ற டிராவிஸ் ஹெட் (Travis Head), தற்போது சொந்த மண்ணில் இந்திய அணிக்கு மேலும் தலைவலி கொடுக்க காத்திருக்கிறார். இவருக்கும் ஜஸ்பிரித் பும்ராவுக்கும் இடையிலான மேட்ச் அப் மிகவும் எதிர்பார்க்கப்டும் ஒன்றாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் பந்து தேய்ந்துவிட்ட பின்னர் அது பேட்டர்களின் சொர்க்கபுரியாக மாறிவிடும்.
பெர்த்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கே அதிக சாதகம் என்றாலும், பேட்டர்கள் செட்டிலாகிவிட்டால் பெரிய ஸ்கோரை நோக்கி செல்லவும் வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில், டிராவிட் ஹெட்டை செட்டிலாகாமல் பார்த்துக்கொள்வது பும்ராவின் (Jasprit Bumrah) கையில் உள்ளது. இவருக்கு எதிராக இந்திய அணி பல வியூகங்களை மனதில் வைத்து செயல்பட்டாக வேண்டும்.
மேலும் படிக்க | அஸ்வின், ஜடேஜாவுக்கு இடமில்லை... இதுதான் பிளேயிங் லெவன் - இக்கட்டில் இந்திய அணி!
பாட் கம்மின்ஸ்
பாட் கம்மின்ஸ் (Pat Cummins) இந்திய அணி பேட்டர்கள் அனைவருக்கும் எதிராகவும் அச்சுறுத்தும் வேகப்பந்துவீச்சாளர் என்றாலும், விராட் கோலியை ரன் அடிக்க விடாமல் பார்த்துக்கொள்வதில் இவர் முக்கிய இடத்தை பிடிப்பார். இந்திய அணி வெற்றிக்கு விராட் கோலி ரன்களை குவிக்க வேண்டியது அவசியமாகும். பாட் கம்மின்ஸ் விராட் கோலிக்கும் விரிக்கும் வலையில் சிக்காமல் தப்பித்தால் மட்டும் இந்திய அணிக்கு விடிவுகாலம் பிறக்கும்.
விராட் கோலி (Virat Kohli) பேட்டிங்கிற்கு வந்து செட்டிலாவதற்கு முன்னரே பாட் கம்மின்ஸ் தனது தாக்குதலை ஆரம்பித்துவிடுவார். பாட் கம்மின்ஸின் அனைத்து கேள்விகளுக்கும் விராட் கோலியிடம் பதில் இருந்தால் மட்டுமே அவரால் நீண்ட நேரம் நிலைத்துநின்று விளையாட இயலும்.
மிட்செல் ஸ்டார்க்
ஸ்டார்க் புதிய பந்துடன் தாக்குதலை ஆரம்பிப்பார். தொடர்ந்து பந்து தேய்ந்த பின்னரும் ரிவர்ஸ் ஸ்விங் ஆட்டத்திற்கு வந்த உடனே மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc) ஓடி வந்துவிடுவார். இந்த முறை ஸ்டார்க்கின் முக்கிய குறி கேஎல் ராகுலாக இருப்பார். கேஎல் ராகுல் வெளிநாடுகளில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். இந்த முறை நீண்ட நாள்களுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியின் ஓப்பனிங் பேட்டராக களமிறங்குகிறார்.
ஜெய்ஸ்வால் ஒருமுனையில் ரன்களை குவித்தால் கேஎல் ராகுல் (KL Rahul) மறுமுனையில் நிலைத்துநின்று பெரிய ஸ்கோருக்கு எடுத்து செல்வது கடமையாக இருக்கும். அந்த வகையில், ஸ்டார்க் கேஎல் ராகுலுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார். தொடக்கம் சிறப்பாக அமைவதை ஸ்டார்க் தடுக்கும்பட்சத்தில் இந்திய அணியின் வெற்றியும் கனவாகிவிடும்.
மேலும் படிக்க | IND vs AUS: பார்டர் கவாஸ்கர் தொடரில் சேதேஷ்வர் புஜாரா! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ