Reduce death Risk: இதை சாப்பிட்டால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம்

ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடித்தால் நீண்ட ஆயுள் ஒன்றும் கிடைக்காத வரம் அல்ல. இதை நிரூபிக்கிறது நியூட்ரியண்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி ஒன்று

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 20, 2021, 03:01 PM IST
  • நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ அக்ரூட் உதவுகிறது
  • வாரத்திற்கு 5 அக்ரூட் சாப்பிட்டால் மரண அபாயம் 14 சதவிகிதம் குறைகிறது
  • ஆயுட்காலம் 1.3 வருடங்கள் அதிகரிக்கிறது
Reduce death Risk: இதை சாப்பிட்டால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம்  title=

புதுடெல்லி: ஒருவரை வாழ்த்தும்போது நீண்ட ஆயுளுடன் வாழ்க என்றும், வாழ்க வளமுடன் என்றும் வாழ்த்துவது நமது தொன்மையான மரபு. ஆனால் வாழ்த்துவதும், நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான விருப்பத்தை நமது உடல் தான் தீர்மானிக்கிறது. ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடித்தால் நீண்ட ஆயுள் ஒன்றும் கிடைக்காத வரம் அல்ல.

இதை நிரூபிக்கிறது நியூட்ரியண்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி ஒன்று. வாரத்திற்கு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட அக்ரூட் பருப்புகளை சாப்பிடுபவர்களுக்கு இறப்பு அபாயம் குறைவதாகவும், ஆயுட்காலத்தை நீட்டிப்பதில் அக்ரூட் எனப்படும் வாதுமைக் கொட்டை முக்கிய பங்கு வகிப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.  

வாதுமையை சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடுகையில் அதை தொடர்ந்து சாப்பிடுபவர்களின் ஆயுட்காலம் அதிகமாக உள்ளது.  வாரத்திற்கு ஒரு சில அக்ரூட் பருப்புகள் கூட ஆயுளை அதிகரிக்கிறது. குறிப்பாக தரமான உணவு உண்ணாதவர்களுக்கும் இது பொருந்துகிறது என்று ஆய்வு கூறுகிறது.

Also Read | பூவன்பழத்தின் அற்புத நன்மைகள்! யாரெல்லாம் இதை சாப்பிடக்கூடாது தெரியுமா?

வாரத்திற்கு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட அக்ரூட் கொட்டையை சாப்பிடுபவர்களுக்கு பொதுவாக மரண அபாயம் 14 சதவிகிதம் குறைகிறது, அதேபோல் இருதய நோய்களால் (cardiovascular diseases) இறக்கும் அபாயம் 25 சதவிகிதம் குறைகிறது என்று கூறும் இந்த ஆராய்ச்சி, மேலும் சுமார் ஆயுட்காலத்தை 1.3 வருடங்கள் அதிகரிப்பதாக தெரிவிக்கிறது.

இந்த ஆய்வுக்காக, ஆராய்ச்சியாளர்கள் 67,014 செவிலியர்களின் உடல்நலனை கண்காணித்தார்கள். இந்த ஆய்வு சுமார் 20 ஆண்டுகள் (1998-2018) கண்காணிப்பில் நடைபெற்றுள்ளது.. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உணவு உட்கொள்ளல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் தங்கள் ஒட்டுமொத்த உணவு உட்கொள்ளல் குறித்து தகவல்களை தொடர்ந்து கொடுத்து வந்தனர். இதில், வாதம் கொட்டை, பிற கொட்டை வகைகள் மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை உட்கொண்டனர், அத்துடன் உடற்பயிற்சி மற்றும் புகைபிடிக்கும் நிலை போன்ற வாழ்க்கை முறை காரணிகளும் தரவுகளில் சேர்க்கப்பட்டன.

இந்தத் தரவுகளின் அடிப்படையில், ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு நிலைகளில் வால்நட் நுகர்வு மற்றும் நீண்ட ஆயுள் தொடர்பான பல்வேறு சுகாதார குறிகாட்டிகளுக்கு இடையேயான தொடர்புகளை அடையாளம் கண்டறிந்தனர்.

READ ALSO | Tips for good health: உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கும் சூப்பர் ஜூஸ்கள்…

 சரி அப்படி என்ன தான் இருக்கிறது இந்த வாதுமைக் கொட்டையில்?

அக்ரூட் என்னும் வாதுமையில் கீழ்கண்ட சத்துக்கள் உள்ளன:
வாதுமைப் பருப்பில் 4% நீர், 15% புரதம், 65% கொழுப்பு, 14% கார்போவைதரேட்டு மற்றும் 7% நார்சத்து உள்ளது.
100 கிராம் வாதுமைப் பருப்பில் 2740 கிலோயூல்களையும் மாங்கனீசு உட்பர பல உயிர்ச் சத்துக்கள் நிறைந்துள்ளது.  
வாதுமையில் மோனோ, பால்அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களின் உயர்ந்த உள்ளடக்கம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்துக்கு முக்கியமான ஊட்டசத்தாகும். வாதுமையில் உள்ள  டிஎச்ஏ எனும் ஒமேகா 3-வகை அமிலமானது மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதிலுள்ள நார்சத்து, செலினியம் , வைட்டமின் பி7 ஆகிய சத்துகள் முடி உதிர்வை குறைக்கின்றன. 

வாதுமையில் வைட்டமின், தாது சத்துகள் அதிக அளவில் உள்ளன. வாதுமையில் உள்ள நல்ல கொழுப்புகள் கெட்ட கொழுப்புகளை குறைக்கும்.

Also Read | செவ்வாழையின் சூப்பர் நன்மைகள்! யார் இதை சாப்பிடக்கூடாது?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News