Weight loss with lemon : வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால், எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இன்று பெருகிவிட்டது. பல மணிநேரம் அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்யும் நிலை, உடல் எடையை கூட்டுவதில் நிறைய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமல்லாமல், உணவு உண்பதில் ஏற்பட்ட மாற்றங்களாலும் உடல் எடை பிரச்சனை இன்று பெரிதாகிவிட்டது.
பணம் சம்பாதிப்பது கஷ்டம், செலவு செய்வது சுலபம் என்று சொல்வதைப்போல, உடல் எடையை அதிகரிப்பது சுலபம் ஆனால், அதை கரைப்பது ரொம்ப கஷ்டம் என்ற புது மொழி இன்று பரவலாகிவிட்டது. பசி எடுத்தால், பெரும்பாலும் நொறுக்குத் தீனிகள் மற்றும் வறுத்த உணவுகளை உட்கொள்ளும் பழக்கத்தின் காரணமாக எடை அதிகரித்து வயிறு பெரிதாகத் தொடங்குகிறது.
தொந்தியும் தொப்பையுமாக காட்சியளிக்க யாரும் விரும்புவதில்லை, இது அழகுக்கான விஷயம் மட்டுமல்ல. ஏனென்றால், அதிக எடை காரணமாக, பல கடுமையான நோய்கள் ஏற்படுகினிரன. சரியான உணவு மற்றும் சீரான வாழ்க்கை முறைகளை பின்பற்றாததால் அதிகரித்த உடற் பருமன் ஒரு காலகட்டத்திற்கு பிறகு பிரம்மாண்டமான பிரச்சனையாக உருவெடுத்துவிடுகிறது.
மேலும் படிக்க | ஜிம் வேண்டாம், டயட் வேண்டாம்.. இதை மட்டும் சாப்பிட்டே தொப்பை கொழுப்பை குறைக்கலாம்
சில ஆரோக்கியமான நடவடிக்கைகளை எடுத்தால், அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம். இதற்காக பலர் காசையும் நேரத்தையும் செலவு செய்து ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். ஆனால், இவற்றால் பல நேரங்களில் உடல் எடை குறைந்தாலும் ஏதாவது காரணத்தினால் சில நாட்கள் விட்டுபோனால், உடல் எடை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிடுகிறது.
இந்த பிரச்சனைகள் ஏதுமே இல்லாமல், இயற்கையான மற்றும் எந்தவித பக்கவிளைவும் இல்லாமல் உடல் எடையை குறைக்கும் பழக்கத்தை வழக்கமாக்கினால், தொப்பைக் கொழுப்பு போயே போச்சு! தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் பருமனை குறைக்க எலுமிச்சையுடன் ஜோடி சேரும் பொருட்கள் எவை என்று தெரிந்துக் கொள்ளலாம்.
எலுமிச்சை & வெள்ளரி
உடலில் கொழுப்பு படியத் தொடங்கும்போது அது தேர்ந்தெடுக்கும் இடம் வயிறு மற்றும் தொடைகள் தான். இந்த பிரச்சனையை போக்க எலுமிச்சை மற்றும் வெள்ளரி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை இரண்டையும் கலந்து குடித்தால் எளிதாக உடல் எடையை குறைக்கலாம். வெள்ளரிக்காய் உடல் சூட்டை குறைக்க உதவுகிறது, எலுமிச்சை உடலில் இருந்து நச்சுகளை அகற்றி உடலை சுத்தப்படுத்த உதவுகிறது. எனவே வெள்ளரியை சாறு எடுத்து அதில் எலுமிச்சை கலந்து குடித்தால் சருமம் மெருகேறும், உடல் எடையும் குறைய ஆரம்பிக்கும்.
மேலும் படிக்க | உடல் பருமனை குறைக்க ஈசி வழி: இரவில் இப்படி, இதை சாப்பிடுங்க போதும்
எலுமிச்சை மற்றும் தேன்
எலுமிச்சையும் தேனும் எப்போதும் நல்ல காம்பினேஷன் என்று பெயர் வாங்கியவை. இரண்டும் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. காலையில் எழுந்து வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்து குடித்தால், 15 நாட்களில் உங்கள் எடை குறையத் தொடங்கும், நோய் எதிர்ப்பு சக்தியும் வலுவடையும். இந்த சிம்பிளான வழி ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
எலுமிச்சை மற்றும் இஞ்சிச்சாறு
சட்டு புட்டுன்னு உடல் எடையை குறைக்க விரும்பினால், கண்டிப்பாக எலுமிச்சை மற்றும் இஞ்சி காம்பினேஷன் சூப்பர் பானமாக செயல்படும். எலுமிச்சை உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது, இஞ்சியுடன் சேர்ந்தால், உடல் கொழுப்பை குறைக்க உதவுகிறது. எலுமிச்சை மற்றும் இஞ்சியுடன் சாறு கலந்து குடித்து வந்தால், ஒரு மாதத்தில் 10 கிலோ வரை உடல் எடையை குறைக்கலாம்.
எலுமிச்சை மற்றும் புதினா
உடல் எடை வேகமாக அதிகரித்துக் கொண்டிருந்தால், அதைக் குறைக்க எலுமிச்சை மற்றும் புதினா ஜூஸ் குடிக்கலாம். இந்த பானத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது விரைவாக உடல் எடை ஆரோக்கியமாக குறையும், மேலும் எடையும் கூடாது.
(பொறுப்பு துறப்பு: தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இந்த குறிப்புகளை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ