யூரிக் அமில நோயாளிகள் இந்த உணவுகள் பக்கமே போகாதீங்க... விளைவுகள் மோசமா இருக்கும்!!

Uric Acid Control Tips: யூரிக் அமிலம் அதிகமாவதால் மூட்டு வலி, சிறுநீரக கல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக அமர்வது, எழுவது, நடப்பது ஆகிய உடல் செயல்பாடுகளில் கூட தாக்கம் ஏற்படலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 21, 2024, 03:10 PM IST
  • அதிக யூரிக் அமிலம் உள்ள நோயாளிகள் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் துரித உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
  • யூரிக் அமில நோயாளிகள் மதுபானம் மற்றும் பீர் உட்கொள்ளக்கூடாது.
  • யூரிக் அமில நோயாளிகள் கீரை, காளான் போன்றவற்றை உட்கொள்ள வேண்டாம்.
யூரிக் அமில நோயாளிகள் இந்த உணவுகள் பக்கமே போகாதீங்க... விளைவுகள் மோசமா இருக்கும்!! title=

Uric Acid Control Tips: இந்த நவீன் காலகட்டத்தில் பலர் பல வித நோய்களால் அவதிப்படுகிறார்கள். இதில் யூரிக் அமில அளவு அதிகரிப்பதும் முக்கியமான ஒன்று, இதனால் உடலில் பல வித பிரச்சனைகள் ஏற்படுகின்றன. யூரிக் அமிலம் என்பது உடலில் உள்ள ஒரு வகையான கழிவுப் பொருளாகும். இது பியூரின்கள் அதிகமாகக் குவிந்து உடையும்போது உருவாகிறது. பியூரின்கள் உடையும் போது யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாகும். இதனுடன், இது படிக வடிவில் மூட்டுகளில் குவிந்து வலி, வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. 

யூரிக் அமிலம் அதிகமாவதால் மூட்டு வலி, சிறுநீரக கல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக அமர்வது, எழுவது, நடப்பது ஆகிய உடல் செயல்பாடுகளில் கூட தாக்கம் ஏற்படலாம். யூரிக் அமிலம் சிறுநீரகத்தின் வடிகட்டுதல் சக்தியைக் குறைக்கிறது. இதனால் கீல்வாதம், சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இயற்கையான பல வழிகளில் யூரிக் அமில அளவை கட்டுக்குள் கொண்டு வர முடியும். சில உணவுகளை நம் தினசரி டயட்டிலிருந்து விலக்கினால், யூரிக் அமில அளவை குறைக்கலாம். யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க, குறிப்பாக இரவு நேரங்களில் தவிர்க்க வேண்டிய சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

அதிக யூரிக் அமிலம் உள்ள நோயாளிகள் இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

புரதம் நிறைந்த உணவுகள்

நம்மில் பலர் வலுவாக இருக்க நம் உணவில் புரதம் (Protein) நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்கிறோம். ஆனால், உடலில் யூரிக் அமில அளவு அதிகமாக இருந்தால், இவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் புரதம் செரிக்கும்போது பியூரின்களை அதிகரிக்கிறது. இது யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கிறது. 

பால் பொருட்கள்

உடலில் யூரிக் அமிலம் அதிகமாக உள்ளவர்கள், பால், பனீர், கிரீம், வெண்ணெய் போன்ற பால் பொருட்களை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இந்த உணவுகளில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் புரதச்சத்து அதிகம் உள்ளது. இவை யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும்.

காளான், கீரை

யூரிக் அமில நோயாளிகள் கீரை, காளான் (Mushroom) போன்றவற்றை உட்கொள்ள வேண்டாம். ஏனெனில் அவற்றில் மிக அதிக அளவு பியூரின்கள் உள்ளன. இவற்றை உண்பதால் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும்.

இறைச்சி வகைகள், கடல் உணவு

அதிக யூரிக் அமிலம் உள்ள நோயாளிகள் சிவப்பு இறைச்சி, பன்றி இறைச்சி, நண்டு, சிப்பி, மத்தி, கானாங்கெளுத்தி போன்ற கடல் உணவுகளையும் இறைச்சி (Meat) வகைகளையும் தவிர்க்க வேண்டும். இந்த உணவுகளில் அதிக அளவு பியூரின்கள் உள்ளது. இது யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கிறது. குறிக்காக இரவில் இவற்றை உட்கொள்வது யூரிக் அமில நோயாளிகளுக்கு ஆபத்தாகலாம்.

மேலும் படிக்க | வாழைக்காயின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: முழு லிஸ்ட் இதோ

சர்க்கரை அதிகம் உள்ள பானங்கள்

உடலில் யூரிக் அமிலம் அதிகமாக உள்ள நோயாளிகள் குளிர்பானங்கள், பிரக்டோஸ், பேக்கேஜ் செய்யப்பட்ட பழச்சாறுகள் ஆகியவற்றைக் குடிக்கக் கூடாது. அவற்றில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். இவை யூரிக் அமில அளவை அதிகரிக்கும். 

துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள்

அதிக யூரிக் அமிலம் உள்ள நோயாளிகள் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் துரித உணவுகளையும் (Fast Food) கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இவை அவர்களுக்கு விஷத்திற்கு சமம். இந்த உணவுகள் செரிமான செயல்முறையை மோசமாக பாதிக்கின்றன. இவை உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிப்பதோடு இவற்றில் குறைந்த நிறைவுற்ற கொழுப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்பு உள்ளது, இது சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கிறது.

அதிகப்படியான ஒயின் மற்றும் பீர்

அதிக யூரிக் அமிலம் உள்ள நோயாளிகள் மதுபானம் (Alcohol) மற்றும் பீர் உட்கொள்ளக்கூடாது. இவற்றை அதிகமாக உட்கொண்டால் உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும். இதன் காரணமாக கல்லீரல் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், சிறுநீரக செயல்பாடும் பாதிக்கப்படுகின்றது. இதன் காரணமாக யூரிக் அமிலத்தின் வெளியேற்றம் குறைகிறது. அதிக யூரிக் அமிலம் உள்ள நோயாளிகள் அவற்றை உட்கொள்ளக் கூடாது என்பதற்கான முக்கியமான காரணம் இதுதான்.

மேலும் படிக்க | உடல் பருமனை உடனே குறைக்க உதவும் காலை பழக்கங்கள்: 10 நாட்களில் ஒல்லியாகலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News