Zinc Diet: குழந்தைகளின் துத்தநாகக் குறைபாட்டைப் பூர்த்தி செய்யும் உணவுகள்

குழந்தைகளுக்கு துத்தநாகக் குறைபாடு இருக்கும்போது இந்த சிறப்பு அறிகுறிகள் தோன்றும். குறைபாட்டை போக்க இந்த உணவுகளை தொடர்ந்து கொடுத்தாலே போதும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 26, 2022, 01:37 PM IST
  • குழந்தைகளின் ஆரோக்கியம்
  • துத்தநாக குறைபாடு அறிகுறிகள்
  • நோயற்ற வாழ்வுக்கு தேவையான உணவுகள்
Zinc Diet: குழந்தைகளின் துத்தநாகக் குறைபாட்டைப் பூர்த்தி செய்யும் உணவுகள் title=

Children Health: குழந்தைகளுக்கு துத்தநாகக் குறைபாடு இருக்கும்போது இந்த சிறப்பு அறிகுறிகள் தோன்றும். குறைபாட்டை போக்க இந்த உணவுகளை தொடர்ந்து கொடுத்தாலே போதும்

குழந்தைகளின் உடலில் துத்தநாக சத்து குறைபாடு இருந்தால், அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும்.  

வயது வந்தோருடன் ஒப்பிடும்போது ஒரு சிறு குழந்தையின் ஆரோக்கியம் (Children Health) மிகவும் மென்மையானது, எனவே அவர்களை சிறப்பாக கவனிப்பது மிகவும் முக்கியம். பல சமயங்களில் சிறு குழந்தைகள் விளையாட்டில் மும்முரமாக இருந்தால் வயிறு கூட சாப்பிடாமல் இருப்பதை பர்க்கலாம். 

அப்போது, சில நேரங்களில் அவர்களின் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. குழந்தைகளில் துத்தநாக சத்து குறைந்தால், அது  கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். குழந்தைகளின் வளர்ச்சிக்கு துத்தநாகம் மிகவும் முக்கியமானது. துத்தநாகக் குறைபாட்டால், அவர்களின் உடல் வளர்ச்சி குறைகிறது. 

மேலும் படிக்க | தைராய்டை கட்டுப்படுத்த வீட்டு வைத்திய குறிப்புகள்

துத்தநாகக் குறைபாடு காரணமாக, குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு, பசியின்மை மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு போன்ற அறிகுறிகள் தோன்றும்.

குழந்தைக்கு போதுமான ஊட்டச்சத்தை வழங்குவதன் மூலம் துத்தநாகக் குறைபாட்டைச் சமாளிக்க முடியும். குழந்தைகளின் உடலில் துத்தநாகக் குறைபாட்டைப் போக்க உதவும் அத்தகைய சில உணவுகள் இவை..
health

குழந்தைகள் பாதாம், முந்திரி, அக்ரூட் பருப்புகள் மற்றும் வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிட விரும்புகிறார்கள்.

குழந்தைக்கு துத்தநாகக் குறைபாடு இருப்பதாக நீங்கள் நினைத்தால், அவர்களுக்குப் பிடித்தமான உலர் பழங்களை தொடர்ந்து கொடுக்கலாம். உலர் பழங்களில் கணிசமான அளவு துத்தநாக சத்து காணப்படுகிறது.

 health
பால் பொருட்களில் துத்தநாகம் 
பால், தயிர் மற்றும் பாலாடைக்கட்டி போன்ற பால் பொருட்களிலும் போதுமான துத்தநாகம் உள்ளது, இது குழந்தையின் துத்தநாகக் குறைபாட்டைப் போக்க உதவுகிறது.   
துத்தநாகக் குறைபாட்டைப் பூர்த்தி செய்யும் தானியங்கள் 
தினை மற்றும் பார்லி போன்ற தானியங்களும் துத்தநாக சத்தை அதிக அளவில் கொண்டிருக்கின்றன. தினை மற்றும் பார்லி போன்றவற்றின் ரொட்டி அல்லது கிச்சடி செய்து கொடுக்கவும். 

health
குழந்தைக்கு துத்தநாகத்துடன் பல முக்கியமான ஊட்டச்சத்துக்களை வழங்கும். இருப்பினும், கம்பு உடலுக்கு சூடு கொடுக்கும் உணவு என்பதால், கோடை காலத்தில் அதை அதிகமாக கொடுக்க வேண்டாம்.

பருப்புகள்
சிறு குழந்தைகள் பெரும்பாலும் பருப்பு வகைகளை விரும்புகிறார்கள்,

health

எனவே நீங்கள் அவர்களின் உணவில் பீன்ஸ், கொண்டைக்கடலை மற்றும் பருப்பு வகைகளை சேர்க்கலாம். பருப்பு வகைகளில் துத்தநாகம் மற்றும் புரதம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இது அவர்களின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது.

காளான்களில் துத்தநாகம்
துத்தநாகம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு காளான் ஒரு சிறந்த உணவாக இருக்கும்,

health

ஏனெனில் அதில் துத்தநாகம் நல்ல அளவில் உள்ளது. கூடுதலாக, இதில் உள்ள இரும்பு சத்து மற்றும் பல வகையான வைட்டமின்கள் குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கா, இந்த உணவுகளை அதிகமா எடுத்துக்கோங்க 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News