பூசணிக்காய் மட்டுமல்ல, அதன் விதைகளும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது. பூசணி விதைகள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் களஞ்சியம். இவற்றில் துத்தநாகச் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன. ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவையும் இதில் நிறைந்துள்ளது. ஆண்மை பிரச்சனையை தீர்ப்பது முதல், ஆரோக்கியமான எலும்புகள், சிறந்த வளர்சிதை மாற்றம் வரை பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுக்கிறது.
ஆண்மை பிரச்சனைக்கு தீர்வு
ஆண்களின் பாலியல் ஹார்மோன்களைத் தூண்டி, ஆண்மை பிரச்சனையை நீக்கும் ஆற்றல் பூசணி விதைக்கு உண்டு. விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கவும் இது உதவும். விந்தணு குறைபாட்டிற்கு துத்தநாக சத்து குறைபாடும் ஒரு காரணம். எனவே, துத்தநாகச் சத்து அதிகம் கொண்ட பூசணி விதைகள் விந்தணுக்களின் தரம் எண்ணிக்கையை மட்டும் அல்லாமல் விந்து சக்தியையும் அதிகரிக்கும்.
நீரிழிவை கட்டுப்படுத்தும் பூசணி விதை
நீரிழிவு நோயாளிகள் பூசணி விதை உட்கொள்வதினால், இரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்தலாம். இதில் உள்ள மெக்னீசியம் இன்சுலின் உணர்திறனை அதிகரித்து, இரத்தத்தில் குளுக்கோஸ் என்னும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. பொதுவாகவே, சர்க்கரை நோய் இல்லாதவர்களும், இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் (Diabetes Control Tips) ஏற்படும் அபாயத்தையும் குறைக்கலாம்.
எலும்பு ஆரோக்கியம்
பூசணி விதைகளில் எலும்புகளின் வலிமைக்கு அவசியமான ஊட்டச்சத்துக்களான கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள். இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவிழந்து ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் அபாயத்தை பெருமளவு குறைக்கலாம். உணவில் அடிக்கடி பூசணி விதைகளை சேர்த்துக் கொள்வது எலும்பு முறிவுகள் போன்ற அபாயங்களையும் குறைக்கும். மூட்டு வலி, கீல்வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் நிவாரணம் பெறலாம்.
பூசணி விதைகளை உட்கொள்ளும் முறைகள்
பூசணி விதைகளை சிற்றுண்டிகளில் சேர்க்கலாம். நீங்கள் விரும்பினால், பூசணி விதைகளை ஸ்மூத்திகளில் சேர்த்தும் சாப்பிடலாம். எனினும் பூசணி விதைகளை காலை உணவில் பூசணி விதைகளை உட்கொள்வதன் மூலம், அதிக பட்ச பலனை பெறலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ