அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் பரிசு: ஊதியக்குழுவுக்கு பதிலாக புதிய முறை, அதிக நன்மைகள்

7th Pay Commission: ஊதியக்குழுவிற்கு பதிலாக, சம்பள கட்டமைப்பை உருவாக்க, புதிய ஒரு வழிமுறையை பின்பற்ற அரசு தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

7th Pay Commission: பெர்ஃபார்மென்ஸ் பேஸ்ட் பே சிஸ்டத்தின் சோதனை வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் இது முறையாக அமல்படுத்தப்படக்கூடும். இந்தப் புதிய முறையின் கீழ், பணவீக்க விகிதம் மற்றும் ஊழியர்களின் செயல்திறன் ஆகிய இரண்டின் அடிப்படையில் அவர்களது சம்பளம் தொடர்ந்து உயர்த்தப்படும். இந்த புதிய முறையின் கீழ் பணவீக்க விகிதத்திற்கு ஏற்ப அகவிலைப்படி (DA) அதிகரிக்கப்படும், இது ஊழியர்களின் வாங்கும் திறனை மேம்படுத்தும். 

1 /11

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்டகாலமாக 8வது ஊதியக்குழு குறித்த அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள். அடுத்த ஊதியக்குழுவை அமைக்கும் எண்ணத்தில் தற்போது அரசு இல்லை என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2026 ஆம் ஆண்டுக்குள் அடுத்த ஊதியக்குழு அமைக்கப்பட வேண்டும் என்பதால், ஊழியர்களுக்கு இடையில் குழப்பமான சூழல் உள்ளது.

2 /11

முன்னதாக, தேசிய ஓய்வூதிய முறையை அகற்றி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்ற புதிய முறையை அறிமுகம் செய்தது. அதே போல் இப்போதும் நடக்கலாம் என கூறப்படுகின்றது.

3 /11

ஊதியக்குழுவிற்கு பதிலாக, சம்பள கட்டமைப்பை உருவாக்க, புதிய ஒரு வழிமுறையை பின்பற்ற அரசு தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது குறித்தும் இன்னும் அரசு தரப்பிலிருந்து எந்த வித தகவலும் வெளிவரவில்லை.    

4 /11

8வது ஊதியக்குழு அமைக்கபடுவதற்கான சாத்தியம் இல்லை என்றே இப்போது தோன்றுகிறது. ஊதியக்குழுக்களுக்கான பாரம்பரியத்தை உடைத்து, அதற்கு பதிலாக செயல்திறன் அடிப்படையிலான புதிய முறையை அரசு கொண்டுவரக்கூடும் என கூறப்படுகின்றது. இதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கிவிட்டதாகவும் ஒரு சாரார் கூறுகிறார்கள். இதில் தனியார் துறை ஊழியர்கள் போல ஒவ்வொரு ஆண்டும் சம்பள திருத்தம் இருக்கலாம்.

5 /11

செயல்திறன் சார்ந்த சம்பள உயர்வு, அதாவது பெர்ஃபார்மென்ஸ் பேஸ்ட் பே சிஸ்டம் என்று அழைக்கப்படும் புதிய முறை, பணவீக்கம் மற்றும் ஊழியர்களின்  செயல்திறன் அடிப்படையில் ஊழியர்களின் சம்பளத்தை தீர்மானிக்கும். இதுவும் அதிக லாபகரமானதாக இருக்கும் என நம்ப்பப்படுகின்றது.  

6 /11

ஊதிய உயர்வு: இந்த பெர்ஃபார்மென்ஸ் பேஸ்ட் பே சிஸ்டத்தின் சோதனை வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் இது முறையாக அமல்படுத்தப்படக்கூடும். இந்தப் புதிய முறையின் கீழ், பணவீக்க விகிதம் மற்றும் ஊழியர்களின் செயல்திறன் ஆகிய இரண்டின் அடிப்படையில் அவர்களது சம்பளம் தொடர்ந்து உயர்த்தப்படும்.   

7 /11

பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால், புதிய முறையின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் சம்பள திருத்தம் இருக்கும் என கூறப்படுகின்றது. 2016ல் அமல்படுத்தப்பட்ட 7வது ஊதியக் குழு, மத்திய ஊழியர்களின் சம்பளத்தை கணிசமாக உயர்த்தியது. இதன் கீழ், சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.

8 /11

இந்த புதிய முறையின் கீழ் பணவீக்க விகிதத்திற்கு ஏற்ப அகவிலைப்படி (DA) அதிகரிக்கப்படும், இது ஊழியர்களின் வாங்கும் திறனை மேம்படுத்தும். பணியாளர்கள் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் சம்பள உயர்வு பெறுவார்கள், இது அவர்களின் செயல்திறனை மேம்படுத்தும். சம்பள உயர்வு செயல்முறை மிகவும் வெளிப்படையானதாகவும், நவீனமயமாகவும் இருக்கும். இதன் மூலம் ஊழியர்களுக்கு நிலையான மற்றும் உறுதியான சம்பளம் கிடைக்கும்.

9 /11

தற்போது அக்ரோயிட் ஃபார்முலாவை (Aykryod Formula) அமல்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கலாம் என்று நிபுணர்கள் மற்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய ஃபார்முலா மூலம் பணியாளர்கள் கணிசமான அளவில் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஊதிய முறை தொடர்பான முழுமையான அவுட்லைன் பிப்ரவரி 2024 மத்திய பட்ஜெட்டில் சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்படுகின்றது. பட்ஜெட்டில் இது முறையாக அமல்படுத்தப்படும் என்றும், இந்த மாற்றம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

10 /11

தற்போதும் தர ஊதியத்திற்கு ஏற்ப சம்பளம் உயர்த்தப்படும் எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், புதிய ஃபார்முலா அமலுக்கு வந்த பிறகு ஊதியம் உயர்த்தப்படும் அளவு அதிகரிக்கலாம். அரசுத் துறைகளில் தற்போது 14 பே கிரேடுகள் (Pay Grade) உள்ளன. ஊழியர் முதல் அதிகாரி வரை அனைவரும் அனைத்து பே கிரேடுகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது சம்பளத்தில் பெரிய மாற்றம் இருப்பதில்லை. புதிய ஃபார்முலா மூலம் அனைத்து பணியாளர்களுக்கும் சமமான பலன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

11 /11

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படி அரியர் தொகை அல்லது புதிய ஊதிய திருத்த முறைக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.