மீண்டும் முடங்கியது IRCTC... டிக்கெட் புக் செய்ய முடியாமல் பயணிகள் அவதி

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் (IRCTC) தளம் மற்றும் செயலி இன்று, இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக செயலிழந்தது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 26, 2024, 03:52 PM IST
  • IRCTC தளம் செயலிழப்பு குறித்து சமூக ஊடகங்களில் பல பயனர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
  • ஐஆர்சிடிசி தளம் டிசம்பர் 9ம் தேதியும் ஒரு மணி நேரம் செயலிழந்தது.
  • உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவை மேம்படுத்த ஐஆர்சிடிசி அமைக்கப்பட்டது.
மீண்டும் முடங்கியது IRCTC... டிக்கெட் புக் செய்ய முடியாமல் பயணிகள் அவதி title=

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் (IRCTC) தளம் மற்றும் செயலி இன்று, இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக செயலிழந்தது. பல பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியவில்லை என சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்தனர். பராமரிப்பு பணிகள் காரணமாகவே வலைத்தளம் மற்றும் மொபைல் செயலியை அணுக முடியவில்லை என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

"பராமரிப்பு நடவடிக்கை காரணமாக, இ-டிக்கெட் சேவை தற்போது இல்லை" என்று IRCTC இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் தளங்களின் செயலிழப்பைக் கண்காணிக்கும் தளமான DownDetector, ஆன்லைன் டிக்கெட் சேவை கிடைக்காதது குறித்து 2,500 புகார்கள் வந்ததாக தெரிவித்துள்ளது.

IRCTC செயலியை திறக்கும்போது, ​​'பராமரிப்புச் செயல்பாட்டின் காரணமாகச் செயல்பட முடியவில்லை' என்ற பிழை பாப்-அப் செய்தி வருவதைக் காணலாம். அதே நேரத்தில், இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி தளத்தில், 'மன்னிக்கவும்!!!' மீண்டும் முயற்சிக்கவும்!' என்ற செய்தி வந்தது.

இந்த செயலிழப்பு குறித்து சமூக ஊடகங்களில் பல பயனர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே அமைச்சரை டேக் செய்து ஒரு பயனர், காலை 10 மணிக்கு ஐஆர்சிடிசி தளம் செயலிழந்துள்ளது. அனைத்து தட்கல் டிக்கெட்டுகளும் 10 மணிக்கும் முன்பதிவு செய்யப்படும் நிலையில், இந்த செயலிழப்பை எப்படி நியாயபடுத்துவது என கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொரு பயனர் எழுதினார், 'இந்தியா நிலவை அடைந்தது, ஆனால் இந்திய ரயில்வே டிக்கெட் முன்பதிவு செயலி செயலிழக்காமல் பராமரிக்க இயலவில்லை. 2024ம் ஆண்டில், சர்வரை சரியாக வைத்திருப்பது ராக்கெட் அறிவியல் அளவிற்கு கடினமானதா!' என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க | ரயில்வேயின் விகல்ப் திட்டம்... வெயிட்டிங் லிஸ்ட் பயணிகள் கன்பர்ம் டிக்கெட் பெறலாம்

முன்னதாக, ஐஆர்சிடிசி தளம் டிசம்பர் 9ம் தேதியும் ஒரு மணி நேரம் மூடங்கியது. இதற்கான காரணமும் பராமரிப்பு பணி தான் என கூறியது. இந்நிலையில், இன்றும் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முயன்ற பயணிகளுக்கு இன்றைய பிரச்சனை பெரும் கோபமடையச் செய்துள்ளது. தட்கல் டிக்கெட்டுகளை ரயில் புறப்படும் நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக முன்பதிவு செய்யலாம். ஏசி வகுப்பு முன்பதிவு காலை 10 மணிக்கும், ஏசி அல்லாத வகுப்புகளுக்கான முன்பதிவு காலை 11 மணிக்கும் தொடங்கும்.

ரயில் நிலையங்கள், ரயில்கள் மற்றும் பிற இடங்களில் கேட்டரிங் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளை நிர்வகிக்கும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) என்பது இந்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள 'மினி ரத்னா (வகை-I)' மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். ஐஆர்சிடிசி 27 செப்டம்பர் 1999 அன்று இந்திய ரயில்வேயின் ஒரு கிளையாக இணைக்கப்பட்டது.

இதனுடன், பட்ஜெட் ஹோட்டல்கள், சிறப்பு சுற்றுலா தொகுப்புகள், தகவல் மற்றும் வணிக விளம்பரம் மற்றும் உலகளாவிய முன்பதிவு முறை ஆகியவற்றின் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவை மேம்படுத்த ஐஆர்சிடிசி அமைக்கப்பட்டது.

மேலும் படிக்க | ரயில் டிக்கெட்டை வேறொருவருக்கு மாற்றலாம்... தேதியையும் மாற்றலாம்... இதோ வழிமுறை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News