Immunity Foods: ஒரே கல்லில ரெண்டு மாங்கா! டைப் 2 நீரிழிவையும் சரி செய்யும் உணவுகள்

Manage Type 2 diabetes with Foods: டைப் 2 நீரிழிவு நோயை நிர்வகிக்கும் கனிம சத்துக்கள் நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அவையே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்த உணவுகளாகவும் மாறிவிடும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 9, 2023, 04:57 PM IST
  • கூலாக சர்க்கரையை கண்ட்ரோல் செய்யும் உணவுகள்
  • டைப் 2 நீரிழிவு நோயை நிர்வகிக்கும் கனிம சத்துக்கள் நிறைந்த உணவுகள்
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்த உணவுகள்
Immunity Foods: ஒரே கல்லில ரெண்டு மாங்கா! டைப் 2 நீரிழிவையும் சரி செய்யும் உணவுகள் title=

Diabetes: மோசமான வாழ்க்கை முறை பழக்கங்களால் பாதிக்கப்படும் டைப் 2 வகை நீரிழிவு நோயாளிகள், அதை சரியான சத்துணவுகள் மூலம் சீர் செய்யலாம். ஆரோக்கியமற்ற உணவுடன் இணைந்து உடற்பயிற்சியும் செய்யாமல் இருக்கும்போது, நீரிழிவின் இரண்டாம் வகை ஒருவரை மிகவும் பாதிக்கிறது. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் உணவுகளால் இந்த சிக்கலைத் தீர்க்கலாம்.

டைப் 2 நீரிழிவு நோயை நிர்வகிக்கும் கனிம சத்துக்கள் நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அவையே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்த உணவுகளாகவும் மாறிவிடும். அப்படிப்பட்ட உணவுகளில், கனிமங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய ஐந்து சூப்பர்ஃபுட்கள் இவை...

பீட்ரூட்
நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம், இரும்பு, மாங்கனீசு மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்த பீட்ரூட் நீரிழிவு நோயாளிகளுக்கு பல நன்மை பயக்கும் விளைவுகளை ஏற்படுத்துகிறது.

மேசையில் உட்கார்ந்தே வேலை பார்க்கும் வழக்கத்தால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் மோசமான உணவு ஆகியவை உயர் இரத்த சர்க்கரை அல்லது நீரிழிவு நோய் உட்பட பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு பங்களிக்கின்றன. இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கவும்,  ஒட்டுமொத்தமாக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும் காய்களில் பீட்ரூட் முதலிடத்தைப் பிடிக்கிறது.

மேலும் படிக்க | இவை சிறுநீரக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்! ஜாக்கிரதை!

நெல்லிக்காய் 

நெல்லிக்காய், 2 நீரிழிவு கொண்ட சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சக்திவாய்ந்த ஆரோக்கியக் கனி ஆகும். குரோமியம் நிறைந்த நெல்லிக்காயானது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்க உதவுகிறது. இது இன்சுலின் உணர்திறனையும் மேம்படுத்துகிறது. நெல்லிக்காயில் நிறைய வைட்டமின் சி உள்ளது மற்றும் ஆக்ஸிஜனேற்ற மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு பெரும்பாலும் நன்மை பயக்கும்.

நெல்லிக்காயை, ஊறுகாய், மிட்டாய்கள், சட்னி செய்தும் அல்லது நெல்லிக்காய் ஜூஸ் செய்தும் குடிக்கலாம். இது சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது.  

ஆரஞ்சு

சிட்ரஸ் பழங்களில் முக்கியமான ஒன்றான ஆரஞ்சு, 'நீரிழிவு சூப்பர்ஃபுட்' என்று அழைக்கப்படுகிறது. குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருக்கும் ஆரஞ்சு பழங்கள் வைட்டமின் சி சத்தை அதிகமாக கொண்டது. மேலும் இது, சர்க்கரை அளவைக் குறைக்கிறது. சேதமடைந்த செல்களை மீட்டெடுக்க உதவுகிறது, ஏனெனில் இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும்.

இலவங்கப்பட்டை தேநீர்

இலவங்கப்பட்டை கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதுடன், இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. அது மட்டுமல்ல, இலவங்கப்பட்டை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும் தன்மை கொண்டதாக இருப்பதால், ரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது. எனவே, ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த இலவங்கப்பட்டையை தேநீர் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

காய்கறிகள்

முட்டைக்கோஸ், காலிஃபிளவர் மற்றும் ப்ரோக்கோலி போன்ற காய்கறிகள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன, உயர் வைட்டமின் சி கொண்ட இந்த காய்கறிகளில் நார்ச்சத்து நிரம்பியுள்ளது.நார்ச்சத்து, கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் கொண்ட இந்த காய்கறிகள் உடலில் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுவதுடன், இதய ஆரோக்கியத்திற்கும் சிறந்தவை ஆகும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பொதுவாக காணப்படும் புற்றுநோய்கள்: ஆண்களுக்கு எது?, பெண்களுக்கு எது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News