Lungs Health: சுவாசத்திற்கு ஆதாரமான ‘நுரையீரல்’ வலுப்பெற செய்ய வேண்டியவை!

நுரையீரலை பராமரிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். நீண்ட காலத்திற்கு நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், சில பழக்கங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 25, 2022, 06:53 PM IST
  • நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், சில பழக்கங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
  • தீவிர நோய்களில் இருந்து நுரையீரலை பாதுகாக்கலாம்.
  • உடற்பயிற்சியுடன், உணவை தேர்ந்தெடுத்து உண்பதும் அவசியம்.
Lungs Health: சுவாசத்திற்கு ஆதாரமான ‘நுரையீரல்’ வலுப்பெற செய்ய வேண்டியவை! title=

நமது வெளிப்புற உறுப்புகளின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது போலவே, உள் உறுப்புகளையும் கவனித்துக்கொள்வது அவசியம். நுரையீரல் பாதிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி, நிமோனியா, ஆஸ்துமா, காச நோய், காச நோய்,  உள்ளிட்ட நோய்கள்  ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இன்று நம் மூச்சுக்கு ஆதாரமான நுரையீரலை பத்திரமாக வைத்துக் கொள்வதைப் பற்றி அறிந்து கொள்ளலாம். நுரையீரலை பராமரிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். அத்தகைய சூழ்நிலையில், நீண்ட காலத்திற்கு நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், சில பழக்கங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.  தீவிர நோய்களில் இருந்து நுரையீரலை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை இன்று அறிந்து கொள்ளலாம்.

நுரையீரலை பாதுகாக்க கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள்

1. சுற்றிலும் பசுமை இருந்தால்,  நுரையீரலுக்கு நல்லது என்று கருதப்படுகிறது. ஏனென்றால் ஆக்ஸிஜனைத் தக்க வைத்துக்கொள்வதில் தாவரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது நச்சுகளை அகற்றவும் உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இருக்கும் இடத்தை சுற்றி பசுமையை பராமரிக்க வேண்டும்.

மேலும் படிக்க | Health Alert: இரவில் சாப்பிடக் கூடாத ‘சில’ பழங்கள்!

2. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி செய்வது சுவாச மண்டலத்தை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், நுரையீரலை வலுப்படுத்தும். உதாரணமாக, நீங்கள் தொடர்ந்து  யோகசனம், மூச்சு பயிற்சி செய்யலாம். மூச்சுப் பயிற்சி நுரையீரலுக்கு இது ஒரு சிறந்த பயிற்சி.

3. உடற்பயிற்சியுடன், தனது உணவை தேர்ந்தெடுத்து உண்பதும் அவசியம். வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த அந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்க்கவும். இந்த உணவுகளுடன், பச்சை இலைக் காய்கறிகள் போன்றவை ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

4. நுரையீரல் வலுவாக இருக்க, ஒரு நபர் நிறைய தண்ணீர் உட்கொள்ள வேண்டும் பொதுவாக ஒரு நபர் 8 முதல் 11 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இதைச் செய்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

5. புகைபிடிப்பதை தவிர்க்க வேண்டும். புகைபிடித்தல், புகையிலை நுகர்வு போன்றவை நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | Brain Health: மூளை சோர்வை நீக்கி ‘மன அமைதியை’ தரும் அற்புத மூலிகைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News