மிளகின் பயன்களை அறிந்து கொள்ளுங்கள்!!

Last Updated : Oct 13, 2016, 05:41 PM IST
மிளகின் பயன்களை அறிந்து கொள்ளுங்கள்!! title=

மிளகு கொடி வகையை சார்ந்தது. சித்த மருத்துவத்திலும் மிளகிற்கு சிறப்பிடம் இருக்கிறது. சளி, இருமல், ஆஸ்துமா போன்றவைக்கிக்கு இதனை மருந்தாக பயன்படுடிகிறோம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மிளகு உருவாக்கும். 

* மிளகில் உள்ள வைட்டமின் ஏ, சி, கரோடின்கள், மற்றும் பிற சத்துக்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

* சிறிதளவு மிளகை இடித்து, அதை நீரில் கொதிக்க வைத்து பனவெல்லம் கலந்து அருந்தினால் சளி, இருமல் குணமாகும்.

* மிளகை பொடி செய்து, அருகம்புல் சிறிதளவு சேர்த்து,  நீரில் கொதிக்க வைத்து குடித்தால் பூச்சி கடி காரணமாக ஏற்படும் தோல் தடிப்பு, அரிப்பு போன்றவை குணமாகும். 

* ஒரு வெற்றிலையை மிளகுடன் சேர்த்து அதை நீரில் கொதிக்கவைத்து அருந்தினால் தும்மல், கண்களை சுற்றிய அரிப்பு, மூக்கில் நீர் வழிதல் போன்றவை குணமாகும்.

* மிளகு, பெருஞ்சீரகம் இவை இரண்டும் பொடி செய்து தேனில் கலந்து சாபிட்டால் மூல நோய் குணமாகும்.
 
* மிளகு பொடியுடன் உப்பு கலந்து பல் தேய்தால் பல் கூச்சம் மற்றும் பல் சொத்தை போன்றவை குணமாகும்.

* மிளகுடம் சிறிது உப்பு சேர்த்து சாபிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

Trending News