Heart Health: LDL கொலஸ்டிராலை எரிக்கும் ‘சில’ உணவுகள்!

உடலில் LDL என்னும் கெட்ட கொலஸ்டிரால் அதிகமாகி, HDL என்னும் நல்ல கொலஸ்டிரால் அளவு குறைந்து கொண்டே போகும் போது, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, பக்க வாதம், மாரடைப்பு போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 27, 2022, 01:58 PM IST
  • இதய நோய் பிரச்சனைகளில் இருந்து விடுபட,வெறும் மருந்தை மட்டுமே தீர்வாக கொள்ளக் கூடாது.
  • பூண்டில் உடலுக்கு உற்சாகம் அளிக்கும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளன.
  • மாரடைப்பு, நீரிழிவு போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும் உணவுகள்.
Heart Health: LDL கொலஸ்டிராலை எரிக்கும் ‘சில’ உணவுகள்! title=

இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, ரத்தத்தில் அதிக கொலஸ்டிரால் என்பது அநேகருக்கு உள்ள பொதுவான பிரச்சனையாகவே உள்ளது. இதனால், உடல் எடை அதிகரிப்பு, சர்க்கரை நோய் போன்ற பல பிரச்சனைகளால் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். பலர் இந்த பிரச்சனைகளுக்கு ஆளாவதற்கு முக்கிய காரணம் அவர்கள் எடுத்துக் கொள்ளும்  உணவு தான் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். எண்ணெய் அதிகம் உள்ள உணவுகள், பொரித்த உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகளை அதிகமாக உட்கொள்வதால், பெரும்பாலானோருக்கு, அதிக கொலஸ்டிரால், இதய நோய் உள்ள பல பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள்.

 ஆனால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட, வெறும் மருந்தை மட்டுமே தீர்வாக கொள்ளக் கூடாது. பல்வேறு வகையான உணவு விதிகளை பின்பற்ற வேண்டும். அதுமட்டுமின்றி, உணவு முறையில், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உணவில் சிறிய மாற்றங்கள் செய்வதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலை எரித்து,  அதன் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நம்முடைய உடலில் LDL என்னும் கெட்ட கொலஸ்டிரால் அதிகமாகி, HDL என்னும் நல்ல கொலஸ்டிரால் அளவு குறைந்து கொண்டே போகும் போது, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, பக்க வாதம், மாரடைப்பு போன்ற பல்வேறு மோசமான பாதிப்புகள் உண்டாகின்றன.

கெட்ட கொலஸ்டிராலை எரிக்கும் சில உணவுகள்: 

சிட்ரஸ் பழங்கள்:

கெட்ட கொலஸ்ட்ராலை எரிப்பதில் ஆப்பிள்கள், பெர்ரி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற  சிட்ரஸ் பழங்கள் சிறந்தவை என்கின்றனர் நிபுணர்கள். இவற்றை தினமும் உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் எளிதில் கட்டுப்படும். எனவே, உடல் எடை அதிகரிப்பு மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இவற்றை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

மேலும் படிக்க | Health Alert: சிறுநீரக கல் இருந்தால் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!

பச்சை நிறை காய்கறிகள்:

கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் சில குறிப்பிட்ட காய்கறிகள் மற்றும் பிற சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த பச்சை நிறை காய்கறிகளை, குறிப்பாக கீரையை அதிகம் உட்கொள்ள வேண்டும். பச்சை நிற காய்கறிகளில்  இரும்புச் சத்து நிறைந்திருக்கும்.  இது இதயத்ட்தின் ரத்த ஓட்டத்தை சீராக்கி,  தமனிகள் ஏற்படும் அடைப்பில் இருந்து காக்கிறது.

மஞ்சள்:  

அதே போன்று மஞ்சள் உடலுக்கு மிகவும் நல்லது. இது பல்வேறு நோய்களில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இரவில் படுக்கும் முன் மஞ்சள் கலந்த பாலைக் குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொலஸ்ட்ரால் எளிதில் கரைந்துவிடும் என்கின்றனர் நிபுணர்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

 பூண்டு:
 
பூண்டில் உடலுக்கு உற்சாகம் அளிக்கும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளன. இவற்றை உட்கொள்வதால் உடலில் சேரும் கெட்ட கொழுப்புகள் எளிதில் குறையும். மாரடைப்பு, நீரிழிவு போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது. இவற்றை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

வாதுமை பருப்பு:

நட்ஸ் வகைகளிலேயே ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாகக் கொண்டது வால்நட் என்னும் வாதுமை பருப்பு தான். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நம்முடைய உடலின் டிரை கிளிசரைடுகளை அதிகரிக்கச் செய்து கெட்ட கொலஸ்டிராலின் உற்பத்தியைத் தடுக்கிறது. கடல் உணவுகளில் உள்ள அதே அளவு கொழுப்பு அமிலங்கள் வாதுமை பருப்பில் நிறைந்திருப்பதால், இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Anemia: மாதுளை - பீட்ரூட் மட்டுல்ல; இதுவும் ரத்த சோகையை குணப்படுத்தும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News