ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால், பலருக்கு கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் இருப்பதைக் காணலாம். அவற்றில் ஒன்று கொழுப்பு கல்லீரல் பிரச்சனை. கல்லீரலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது கொழுப்பு கல்லீரல் ஏற்படுகிறது. கொழுப்பு கல்லீரலுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், கல்லீரல் செயலிழப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படலாம்.
கொழுப்பு கல்லீரல் பிரச்சனை என்பது ஒரே நாளில் ஏற்படக் கூடியது அல்ல. படிப்படியாக அதன் தாக்கம் ஏற்படும். பெரும்பாலான மக்கள் கொழுப்பு கல்லீரலின் ஆரம்ப அறிகுறிகளை புறக்கணிப்பதால், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைப்பதில்லை. டாக்டர் சௌரப் சேதி, கொழுப்பு கல்லீரல் அறிகுறிகளை விளக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவர் கூறும் அறிகுறிகளின் மூலம் உங்கள் கொழுப்பு கல்லீரல் பற்றி ஆரம்ப நிலையிலேயே தெரிந்து கொள்ளலாம். அவர் கூறியுள்ள கொழுப்பு கல்லீரல் அறிகுறிகள் குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.
குமட்டல் மற்றும் பசியின்மை (Digestion Issues)
குமட்டல் மற்றும் பசியின்மை ஆகியவை நீண்ட நாட்கள் நீடிப்பது கொழுப்பு கல்லீரலின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். ஏனெனில், கல்லீரல் சரியாக செயல்பட வில்லை என்றால், செரிமான ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால், நீங்கள் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும்.
தொப்பை கொழுப்பு (Belly Fat)
வயிற்றின் மையப் பகுதியில் கொழுப்பு சேர்வது கொழுப்பு கல்லீரலின் அறிகுறியாக இருக்கலாம். கொழுப்பு சேர்வதைத் தவிர, வயிற்றின் மையப் பகுதியில் கருப்பு கோடுகள் உருவாகின்றன. இது கொழுப்பு கல்லீரலின் அறிகுறியாகும்.
சோர்வு அல்லது பலவீனம் (Tiredness)
காரணம் இல்லாமல் அதிக சோர்வாக உணர்ந்தால், அது கொழுப்பு கல்லீரலின் அறிகுறியாக இருக்கலாம், ஏனெனில் ஊட்டச்சத்துக்களை உட்லுக்கு சேர்ப்பதிலும், உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவதிலும் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீரலில் கொழுப்பு சேரும் போது, அது சரியாக செயல்பட முடியாது. உடலில் ஊட்டச்சத்துக்கள் குறைவதோடு, நச்சுகள் சேரத் தொடங்குகின்றன. இதனால் சோர்வு மற்றும் ஆற்றல் அளவு குறைகிறது.
வலது விலா எலும்பின் கீழ் வலி (Pain in Right Rib)
வலது விலா எலும்பின் கீழ் வலி அல்லது அசௌகரியம் கல்லீரல் அழற்சியின் அறிகுறியாக இருக்கலாம். வலது விலா எலும்பில் உள்ள வலியைப் புறக்கணிக்காதீர்கள்., உடனடியாக மருத்துவரிடம் சென்று உங்களைப் பரிசோதித்துக்கொள்ளுங்கள்.
சருமம் தொடர்பான பிரச்சனைகள் (Skin Problems)
கொழுப்பு கல்லீரல் தொடர்புடைய இன்சுலின் எதிர்ப்பு காரணமாக முகத்தில் முகப்பரு தோன்றும். அதே சமயம், நச்சுக்கள் சரியாக வெளியேற்றப்படாமல், முகத்தின் பொலிவும் குறைந்து, சருமம் கருத்து போக ஆரம்பிக்கும். சருமம் தவிர, இது தலைமுடியையும் பாதிக்கிறது. அதிகப்படியான முடி உதிர்தல் கொழுப்பு கல்லீரல் அறிகுறியாகவும் இருக்கலாம். கொழுப்பு கல்லீரல் சிகிச்சை மருந்து மற்றும் உணவு உதவியுடன் சாத்தியமாகும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | எச்சரிக்கை... தைராய்டு முதல் சிறுநீரக கல் வரை... அளவிற்கு மிஞ்சிய கீரை நல்லதல்ல
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ